குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட வரை கைது செய்த 8 போலீஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.


கெக்கிராவ பொலிஸ் நிலையப் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி
 உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் 8 பேரை, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த, கெக்கிராவ பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


பொலிஸாரால் தேடப்பட்டுவந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், கெக்கிராவ மேல் பகுதியில் வைத்து, நேற்று (05) மாலை கைதுசெய்யப்பட்டார்.


குறித்த சந்தேகநபர் அவரது சகோதரனுடன் பொலிஸாருக்கு சிக்கிவிடாது, அப்பகுதியில் 8 தினங்கள் மறைந்திருந்துள்ளார்.


 இந்நிலையில், சகோதரன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதனையடுத்து, சந்தேகநபரை கைதுசெய்ய சென்ற அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


அநுராதபுரம்- குருந்தகுளம் பகுதியைச் சேர்ந்த நபரே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்;.
குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட வரை கைது செய்த 8 போலீஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட வரை கைது செய்த 8 போலீஸ் அதிகாரிகள்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். Reviewed by Madawala News on April 06, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.