மினுவாங்கொடை பிரதேச வீடொன்றில் மறைந்திருந்த 31 பேர் கைது


மினுவாங்கொடை நில்பனாவ பகுதி வீடொன்றில் மறைந்திருந்த 
நேபாள பிரஜைகள் 30 பேர் இந்திய பிரஜை ஒருவர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். வீட்டின் உரிமையாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் பின்னர் அவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

பிற நாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதற்கு இலங்கையை இடைத்தங்கல் நிலையமாக இவர்கள் பாவித்துள்ளனர் . ஆனாலும் அரச அறிவிப்புகளை மீறி இவர்கள் மறைந்திருந்தமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

– செய்தியாளர் ஹேமந்த லியனபத்திரன
- சிவா ராமசாமி
மினுவாங்கொடை பிரதேச வீடொன்றில் மறைந்திருந்த 31 பேர் கைது மினுவாங்கொடை பிரதேச  வீடொன்றில் மறைந்திருந்த 31 பேர் கைது Reviewed by Madawala News on April 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.