தனிமைப்படுத்தி சிகிற்சை அளிக்கும் பணிக்கு தனது வீட்டை வழங்கிய பொதுஜன பெரமுன முன்னாள் MP புஞ்சி நிலமே - Madawala News Number 1 Tamil website from Srilanka

தனிமைப்படுத்தி சிகிற்சை அளிக்கும் பணிக்கு தனது வீட்டை வழங்கிய பொதுஜன பெரமுன முன்னாள் MP புஞ்சி நிலமேதிருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோய் அறிகுறிகள் காணப்படும் நோயாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக திருகோணமலை மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தமது வீட்டை வழங்கியுள்ளார்.


திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந்திடம் இன்று (25) இவ்வீடு கையளிக்கப்பட்டது.


இதேவேளை பொது இடங்களில் தொற்று நீக்கும் விடயங்களை மேற்கொள்ளும் நோக்கில் அவரது சொந்த நிதியுதவியுடன் கிருமி நாசினி தெளிகருவிகளையும் வழங்கி வைத்தார்.


அனைத்து பிரதேச சபைகளுக்கும் இக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.


அத்துடன் திருகோணமலை, கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கும்  கிருமி நாசினி தெளி கருவி வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச சபைகளின் தலைவர்கள், மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


கடந்த அமைச்சரவையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சுசந்த புஞ்சி நிலமே செயற்பட்டார்.


(அப்துல்சலாம் யாசீம்)

தனிமைப்படுத்தி சிகிற்சை அளிக்கும் பணிக்கு தனது வீட்டை வழங்கிய பொதுஜன பெரமுன முன்னாள் MP புஞ்சி நிலமே தனிமைப்படுத்தி சிகிற்சை அளிக்கும் பணிக்கு தனது வீட்டை வழங்கிய பொதுஜன பெரமுன முன்னாள் MP புஞ்சி நிலமே Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5