அம்பாறையில் பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்.


பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும்
பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் தெரிவிப்பு
தத்தமது விபரங்களை கிராமசேவகர்களிடம் ஒப்படைக்க வேண்டுகோள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம் என
அம்பாறை மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர்களாக வி.ஜெகதீஷன், ஏ.எம்.அப்துல் லத்தீப்  ஆகியோர் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் சனிக்கிழமை(28) கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும்  அவர்கள் தெரிவித்ததாவது

நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 3ம் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களாக தெரிவு செய்யப்பட்ட அனைவரும் எதிர்வரும் திங்கள்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகங்களிலும் வருகை தர வேண்டாம் என்றும் அவர்கள் அனைவரும் தங்களின் கிராம சேவர்களிடம் வங்கி கணக்கு இலக்கம்,அடையாள அட்டை பிரதி,கல்விச் சான்றுதழ்களின் பிரதிகளை எடுத்து சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது சம்மந்தமான அறிவுறுத்தல்கள் அனைத்தும் அந்தந்த பிரதேச செயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறையில் பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம். அம்பாறையில் பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம். Reviewed by Madawala News on March 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.