நியூயோர்க் நகரத்தை தனிமைபடுத்த தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துவிட்ட
நிலையில், இதில் நியூயோர்க் நகரத்தில் மட்டும் 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலின் மையமாக நியூயோர்க் நகரம் இருப்பதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்நகரத்தை தனிமைப்படுத்துவது குறித்து சிந்திப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் கூறினார்.

ஆனால், ஜனாதிபதி ட்ரம்பின் இந்த யோசனையை நியூயோர்க் ஆளுநர் கடுமையாக விமர்சித்தார். இது ''விபரீதமானது'' அமெரிக்காவிற்கு எதிரானது'', யுத்தத்தை செய்வதற்கு சமனானது'' என்று நியூயோர்க் ஆளுநர் அன்ட்ரு கோமோ ( Andrew Cuomo ) தெரிவித்தார்.

நியூயோர்க்கில் ஏற்கனவே மக்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதென்றும் , நியூயோர்க்கிற்கு முழுமையாக தடை விதித்தால், சீனாவின் வுஹான் மாகணத்தை போல நாம் ஆகிவிடுவோம், இதனால் எந்த பலனும் இல்லை" என நியூயோர்க் ஆளுனர் எதிர்பபை வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நியூயோர்க் பகுதிக்கு பயண எச்சரிக்கையை வெளியிடுவதாகவும் முன்னர் தெரிவித்தார்,

பிராந்தியத்தை முழுவதுமாக துண்டிக்க முயற்சிக்கலாம் என்ற முந்தைய ஆலோசனையிலிருந்து தற்போது பின்வாங்கி  நியூயோர்க்கை தனிமைப்படுத்த தேவையில்லை," என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரத்தை தனிமைபடுத்த தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு! நியூயோர்க் நகரத்தை தனிமைபடுத்த தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு! Reviewed by Madawala News on March 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.