குருநாகல் மற்றும் புத்தளம் இரு மாட்டத்தையும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை.

இக்பால் அலி 
புத்தளம் மாவட்டத்தில் தற்போது கொரோனா நோய் பரவலை 
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குருநாகல் மற்றும் புத்தளம் இரு மாட்டத்தையும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கின்றது. 


சதொசவின் மூலம் உணவுப் பொருட்கள்  விநியோகிப்பது போன்று  கூட்டுறவு சங்கக் கடைகளின் மூலமாகவும் அத்தியாவசியப் பொருட்களை நடமாடும் வேலையின் மூலமாக கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் கொண்டு சென்று விநியோகிக்க நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்ப்படும் என்று வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார். 



வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மிலின் தலைமையில் வடமேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை  காலடியில் பெற்றுக் கொள்ளும் வகையில் நடமாடும் விநியோகங்களை மேற்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல் குருநாகல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில்  உரையாற்றிய ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.



அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்   
இம்மாவட்டத்தில் எந்த முறையில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் எப்படி வழங்கி வைப்பது என்று பொறுப்பு உள்ளுராட்சி மன்ற சபைகளுக்கு இருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை  பொது மக்களுக்கு நடமாடும் சேவையின் மூலம் கொண்டு சென்று வழங்கும் நடவடிக்கைகள் புத்தளம் மாவட்டத்தில் தற்போது முன்னெடுத்த போதிலும் குருநாகல் மாவட்டத்திலும் முன்னெடுப்பதற்கான அவரசமான அவசியமான முயற்சிகள் முன்னெடுக்ப்பட  வேண்டும். 



எதிர்காலத்தில் உணவுத் தட்டுப் பாடுகள்  ஏற்படாத வகையில் அதற்கான ஒழுங்களுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்  மக்கள் தங்கியிருக்கும் கிராமங்களுக்கும் வீடுகளுக்கும்  கொண்டு சென்று  கையளித்தல் மிக அவசியம். இதன் மூலம் மக்;கள்  நெருக்கமாக ஒன்று  கூடுதலை தவிர்த்துக் கொள்ள முடியும்.  அத்துட்ன சதொச கூட்டுறவுச் சங்கக் கடைகளில் கடமைபுரியும் ஊழியர்களை இணைத்துக் கொள்வது மிக அவசியம். 
அதேவேளையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை எவ்வாறு களஞ்சியப்படுத்துதல் அதற்கான இடவசதிகளைத் தெரிவு செய்தல் மிகமுக்கியம்.  சதொச நிறுவனம்  உணவுப் பொருட்களை மொத்தமாக கொள்வனவு செய்தாலும் மீன் டின். மற்றும் பருப்பு வகைளுக்கு அரசாங்கத்தின் திறைசேரியின் மூலம்  மானியம் வழங்கபடுகின்றன.



அரசி, மா, சீன் மூன்று பொருட்களுக்கும் எந்த விதமான தட்டுப் பாடுகளும் இல்லை. பருப்பு மட்டும் தான் தட்டுப்பாடு நிலவுகிறது. ஊரடங்குச் சட்டம் நிலவுவதன் காரணமாக தொழிலாளர்கள் அங்கு வருகை தரவில்லை. அவர்களை விசேடமாக பொலிஸாரின் ஆதரவுடன் வரவழைத்து தற்போது பருப்பு உற்பத்திகள்  முன்னெடுக்கப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளையில் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டையை விநியோகிக்க முடியாமல் பாதிப்பு அடைந்துள்ளார்கள். 


 ஒரு முட்டையின் விலை எட்டு ரூபா என விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் முட்டை உற்பத்தி கோழிப் பண்ணையாளர்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே அவர்களுடைய விநியோகத்தை மேற்கொள்வதற்கு போக்குவரத்து அனுமதி வழங்க வேண்டும் என நேரடியாக பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உடன் உத்தரவிட்டார்.



பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் மூலம் மா , சீனி. போன்றவற்றைக் கொள்முதல் செய்வதற்கும் அதற்கான போக்குவரத்து வசதிகளையும் மேற்கொள்வதற்கு ஆளுநர் உரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு  இதன் போது உடன் நடவடிக்கைகளை  மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சுகாதார வைத்திய நிபுணர் வைத்திய அதிகாரி இந்திகழ்வில் இந்திக  பிரத்திராஜா உரைற்றும் போது 
குருநாகல்; மாவட்டத்தில் ஒரு நோயாளி அடையாளப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடுபத்தாவப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.  



புத்தளம் மாவட்டத்தில் சுகாதார வைத்திய சேவைப் பிரிவில்   ஆறு நோயாளிகள் உள்ளனர். அதில் 4 பேர்  வென்னப்புவையிலும் ஒருவர் நாத்தாண்டியவையிலும் மற்றுமொருவர்  மஹவையிலும் உள்ளனர். 
வெளிநாட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற வகையில் குருநாகல் மாவட்டத்தில் 22 பேர் இருக்கின்றனர். புத்தளம் மாவட்டத்தில் 50  பேர் இருக்கின்றார்கள். 


பொதுவக கொரோனா வைரஸ் நோய்க்கு உட்பட்டவர்களுடன் குறைந்தது 10  நிமிடங்கள் தொடர்பட்டவர்கள் என்ற வகையில் மாகாண முழுவதும்  72 பேர் உள்ளனர். இவர்கள்  தனிமைப்டுத்தப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களும்  உள்ளனர்.
இதற்கும் மேலாக மாகாணத்தில் 4041 வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உள்ளனர். இதில் 2033 பேர் இரண்டு வாரங்கள் தங்கு முகாம்களில்  தனிமைப்படுத்தப்பட்டு நிவராணம் பெற்றுச் சென்றுள்ளனர்.  2008 இன்னும் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 



;குருநாகல் போதனா வைத்தியசாலையில் 10 பேரை வைத்து சிகிச்சை மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளன. வாரியப்பொலவில் இதற்கான புறம்பான இடத்தை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற் கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 
இக்பால் அலி

24-03-2020

குருநாகல் மற்றும் புத்தளம் இரு மாட்டத்தையும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை. குருநாகல் மற்றும் புத்தளம் இரு மாட்டத்தையும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை. Reviewed by Madawala News on March 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.