கந்தளாய் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் நபர் ஒருவர் மட்டக்களப்பு கொரொனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைப்பு.


கந்தளாய் யூசுப் 2020-03-22
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் முதலாவது கொரோனா 
வைரஸ் தொற்றுக்குள்ளான சந்தேக  நபர் ஒருவரை மட்டக்களப்பு கொரொனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டி. ஜீ. மெலிண்டன் கொஸ்தா தெரிவித்தார்.


கந்தளாய் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.


அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது:

கந்தளாய் பிரதேசத்திலுள்ள அனைத்து பொது மக்களும் வெளியில் நடமாடாமல் வீட்டில் இருப்பது சிறந்தது,நாட்டின் சுகாதாரதுறை,பாதுகாப்பு துறை சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்,அதேபோன்று நாளையும்(23) நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.நாம் பொது மக்களை வினயமாக கேட்டுக்கொள்வது வெளியில் திரிவதை குறைத்து விரைவில் முககவசங்களை அணிந்து கொள்ளுங்கள்.

கந்தளாய் தள வைத்தியசாலையில் வைத்திய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்,சின்ன நோய்களுக்கு வைத்தியசாலைகளுக்கு செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் கூறினார்.


மேலும் வீடியோவில்
கந்தளாய் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் நபர் ஒருவர் மட்டக்களப்பு கொரொனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைப்பு. கந்தளாய்  பிரதேசத்தில்  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சந்தேகத்தில்  நபர் ஒருவர்  மட்டக்களப்பு கொரொனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைப்பு. Reviewed by Madawala News on March 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.