கைகளை சுத்தப்படுத்த வைக்கப்பட்டிருந்த சனிடைசரை குடித்த சிறைக் கைதி பலி.


 கைகளை சுத்தப்படுத்த வைக்கப்பட்டிருந்த  சனிடைசரை  - sanitizer - கிருமிநாசினியை குடித்த
கைதி ஒருவர் பலியான சம்பவம் கேரள சிறைச்சாலையில் இடம் பெற்றுள்ளது.

https://www.ndtv.com/kerala-news/prisoner-dies-in-kerala-jail-after-allegedly-mistaking-sanitiser-for-alcohol-2201351

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கைகளை சுத்தப்படுத்த சோப்பு, ஹேண்ட் வாஷ், சனிஸ்டரை உள்ளிட்ட கிருமிநாசினிகள் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல கேரள சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சனிஸ்டரை (Sanitiser) கிருமிநாசினியை கைதி ஒருவர் குடித்ததில் அவர் பலியானார்.

முண்டூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராமன்குட்டி (வயது 36). இவர் திருட்டு வழக்கில் கைதாகி பாலக்காடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவர் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சனிஸ்டரை (Sanitiser) குடித்ததில் மயக்கம் அடைந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

அவர் தற்கொலை செய்வதற்காக கிருமிநாசினியை எடுத்து குடித்தாரா? அல்லது தவறுதலாக எடுத்து குடித்தாரா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைகளை சுத்தப்படுத்த வைக்கப்பட்டிருந்த சனிடைசரை குடித்த சிறைக் கைதி பலி. கைகளை சுத்தப்படுத்த வைக்கப்பட்டிருந்த  சனிடைசரை  குடித்த சிறைக் கைதி பலி. Reviewed by Madawala News on March 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.