ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் கருவியை கண்டுபிடித்த இலங்கை கடற்படை. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் கருவியை கண்டுபிடித்த இலங்கை கடற்படை.


(எம்.மனோசித்ரா)
ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் 
வகையிலான கிருமி நீக்கிக் கூடம் கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொற்று நீக்கிக் கூடம் முதற்கட்டமாக கடற்படை முகாம்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


கடற்படைத்தளபதி வைஸ் அத்மிரல் பியல் டி சில்வாவின் ஆலோசனைக்கமைய பொதுமக்கள் வசிப்பிடங்கள் மற்றும் பொது இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் பொறியியல் பிரிவின் அதிகாரிகளால் ஒரே தடவையில் ஒருவரின் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் வகையிலான கிருமி நீக்கிக் கூடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


கடற்படைத் தளபதியின் பணிப்புரையின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிருமி நீக்கிக் கூடம் கடற்படை முகாம்களில் பயன்படுத்தப்பட்டு வருவதோடு கடற்படை தலைமையகத்திலும் பயன்படுத்தப்படுவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது
ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் கருவியை கண்டுபிடித்த இலங்கை கடற்படை. ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் கருவியை கண்டுபிடித்த இலங்கை கடற்படை. Reviewed by Madawala News on March 27, 2020 Rating: 5