அன்று முகம் மூடியதற்காக எதிர்ப்பு காட்டினர்.. இன்று முழு உலகுமே முகம் மூட நிர்ப்பந்திக்க பட்டது.


சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் பிரான்ஸ் நாடு முஸ்லிம் பெண்க‌ள் முக‌ம் 
மூடுவ‌தை த‌டை செய்த‌து.


ஜேர்ம‌ன் அல்ல‌து இத்தாலி என‌ நினைக்கிறேன் முக‌ம் மூடிய‌த‌ற்காக‌ ஒரு முஸ்லிம் பெண் குத்தி கொலை செய்ய‌ப்ப‌ட்டாள்.


இல‌ங்கையில் ஸ‌ஹ்ரானின் குண்டைத்தொட‌ர்ந்து முஸ்லிம் பெண்க‌ளின் நிகாப், புர்க்காப் (முக‌த்தை முழுவ‌தும் மூடுத‌ல், க‌ண்ணை ம‌ட்டும் திற‌த்த‌ல்) என்ப‌த‌ற்கெதிராக‌ குதித்தார்க‌ள். முக‌ம் மூடுவ‌தை த‌டுக்க‌ ச‌ட்ட‌ம் கொண்டுவ‌ர‌ வேண்டும் என்ற‌ன‌ர் ஆட்சியாள‌ர்க‌ள்.


முஸ்லிம் பெண்க‌ள் முக‌ம் மூட‌த்தேவையில்லை என்ற‌ க‌ருத்துக்கொண்ட‌வ‌ன் நான். என்ற‌ போதும் முக‌ம் மூடுவ‌தை த‌டை செய்யும் ச‌ட்ட‌த்தை அர‌சு கொண்டு வ‌ர‌க்கூடாது, அத‌னை உல‌மா ச‌பை சொல்ல‌லாம் என‌ ஜ‌னாதிப‌தி வ‌ரை எடுத்து சொன்னேன். 
ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்கும் முஸ்லிம்க‌ளின் ஆடைக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை என்றும் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் அபாயா அணிந்தோ, ஜுப்பா த‌லைப்பாகை அணிந்தோ வ‌ர‌வில்லை, அவ‌ர்க‌ள் ஐரோப்பிய‌ரின் லோங்க்ஸ், ஷ‌ர்ட், கெப் அனிந்தெ வ‌ந்த‌ன‌ர் என‌ சிங்க‌ள‌ வானொலிக‌ளிலும் பேசினேன்.


ஆனாலும் அர‌சாங்க‌ம் அவ‌ச‌ர‌ கால‌ ச‌ட்ட‌ம் என‌ கூறி பெண்க‌ளின் முக‌ மூடுத‌லை த‌டை செய்த‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ வ‌ழ‌மையாக‌ முக‌ம் மூடாம‌ல் வீட்டை விட்டு வெளியே வ‌ராத‌ பெண்க‌ள் வீட்டோடு அட‌ங்கியிருந்த‌ன‌ர். மாத‌க்க‌ண‌க்கில் வீட்டுள் கிட‌ந்தன‌ர்.


அவ்வேளை சுகாதார‌த்துக்காக‌ அணியும் மாஸ்க் அணிந்து செல்லுங்க‌ள் என‌ நான் அறிக்கை விட்டேன். அப்போது முஸ்லிம்க‌ள் கூட‌ நான் குழ‌ப்புவ‌தாக‌ என்னை ஏசின‌ர். பெண்ணுரிமை பேசும் போக்கிரிக‌ள் கூட‌ இந்த‌ த‌டை ச‌ட்ட‌த்துக்கெதிராக‌ பேச‌வில்லை.

இவ்வாறான‌ பெண்க‌ளின் சாப‌மோ தெரிய‌வில்லை கொரோனா அச்சம் கார‌ண‌மாக‌ பெண்க‌ள் ம‌ட்டுமல்ல‌ ஆண்க‌ளும் முக‌த்தை மூடுங்க‌ள் என‌ முழு உல‌கும் ச‌ட்ட‌ம் போட்டுள்ள‌து. எவ்வாறு முக‌ம் மூடிய‌ பெண்க‌ள் அது இன்றி வெளியே செல்ல‌ முடியாம‌ல் வீட்டில் முட‌க்க‌ப்ப‌ட்ட‌ன‌ரோ அது போல் இன்று முழு நாடும் முழு உல‌க‌மும் வீட்டுக்குள் முட‌ங்கியுள்ள‌து.


அர‌ச‌ன் அன்று கொல்வான்.
தெய்வ‌ம் நின்று கொல்லும்.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்.
அன்று முகம் மூடியதற்காக எதிர்ப்பு காட்டினர்.. இன்று முழு உலகுமே முகம் மூட நிர்ப்பந்திக்க பட்டது. அன்று முகம் மூடியதற்காக எதிர்ப்பு காட்டினர்.. இன்று முழு உலகுமே  முகம் மூட நிர்ப்பந்திக்க பட்டது. Reviewed by Madawala News on March 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.