உலர் உணவுப் பொதிகள் பங்கீடு செய்வதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.

அனைத்து ஊர் பொறுப்புதாரிகளுக்கும்.
(தனவந்தர்கள், அரசியல்வாதிகள், 
ஊர் நிர்வாகிகள், சகல அமைப்புக்கள்)

கொரோனா கோவிட் 19 தொற்றுநோய் உலகை ஆட்டிப்படைக்கும் சூழலில் இலங்கையும் பாதிப்புக்குள்ளான நாள் தொடக்கம் அதனைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வகையில் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்த காரணத்தால் அனைத்து மக்களுக்கும் பெறும் கஷ்டத்தை அனுபவிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களும் தினக்கூலியாளர்களும் உட்பட மத்திய தர வர்க்கத்தினரும் வாழ்வாதாரம் தேவைப்படும் கவளையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இச்சூழ்நிலையில் முதன் முதலில் சிறிய அளவில் ஆங்காங்கே உதவிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து
நாடெங்கிலும் தனிநபர்கள் முதற்கொண்டு அமைப்புகள் ரீதியாக உலர் உணவுப் பொதிகள் வழங்குவதற்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்.

▪️ஒரே ஊரில் தனிநபர்களாகவும் அமைப்புகளாகவும் தனித்தனியாக தத்தமது அஜண்டாவின்படி உணவுப்பொதிகளை வழங்கும்போது ஏற்கனவே பொதிகள் கிடைத்தவர்களுக்கே திரும்பவும் கிடைக்க வாய்ப்பேற்படலாம். 

▪️ஒரே ஊரைச் சேர்ந்த பல குழுக்கள் நன்கொடை சேகரிப்பில் ஈடுபடும்போது யாரிடம்  கொடுப்பது என்ற தர்மசங்கடமான நிலமை மக்களுக்கு ஏற்படும். 

▪️இவற்றை தவிர்ப்பதற்கு ஊர் மட்டத்தில் அனைவரும் ஒரு குழுவாக  ஒன்றிணைந்து வெளிநாடுகளில் வசிக்கும் ஊர்வாசிகளையும் இணைத்துக்கொண்டு இக்காரியத்தை முன்னெடுக்கலாம்.

▪️நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை இனங்கான  முடியாத அல்லது கால வரையறையை மட்டுப்படுத்த முடியாத (துரதிஷ்ட) சூழ்நிலையில் ஒரு தடவையுடன் தேவையுடையோரின் வாழ்வாதாரத்தை கொடுத்தால் போதும் என்று எண்ணங்கொள்ள முடியாதுள்ளது.  

▪️முதல் கட்டமாக தேவையுடையோருக்கு உதவுதல்.

▪️அடுத்த கட்ட உதவிக்கு தயார் நிலையில் பொருளாதாரத்தை கையிருப்பாக வைத்திருத்தல்.

சில முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியபோது ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றங்களையே இங்கு பதிவு செய்துள்ளேன்.

ஆக்கம் ✍️ சுல்பி அ.சமீன்.
உலர் உணவுப் பொதிகள் பங்கீடு செய்வதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள். உலர் உணவுப் பொதிகள் பங்கீடு செய்வதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள். Reviewed by Madawala News on March 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.