அமெரிக்காவில் இன்று ஒரே நாளில் சுமார் பத்தாயிரம் பேருக்கு கொரோனா தொற்று.


அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் 9928 பேரால்  அதிகரித்துள்ளது.


26ம் தேதி மாலை நிலவரப்படி, ‘உலகம் முழுவதும் கொரோனா வைரசால், 4,87,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,17,749 பேர் குணமடைந்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ள, உலக சுகாதார அமைப்பு, ‘கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது’ என, வருத்தம் தெரிவித்துள்ளது.

‘அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்று ஒரே நாளில், 10 ஆயிரம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதில் இருந்து, ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான்’ என,ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 66,132 ஆக உயர்ந்துள்ளது; 1,054 பேர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனாவால், இத்தாலியில் – 7,503 பேரும்,
ஸ்பெயினில் – 4,089, சீ
னாவில் – 3,287 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நோய்த்தொற்றை பொறுத்தவரை, அதிகபட்சமாக சீனாவில் – 81,782 பேரும், இத்தாலியில் – 74,386, அமெரிக்காவில் – 69,197 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மிகத் தாமதமாக முன்னெடுத்ததும்; போதுமான சோதனைக் கருவிகள் அங்கு இல்லாததுமே வைரஸ் வேகமாகப் பரவக் காரணம்’ என, அமெரிக்க மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அமெரிக்காவில் இன்று ஒரே நாளில் சுமார் பத்தாயிரம் பேருக்கு கொரோனா தொற்று. அமெரிக்காவில் இன்று  ஒரே நாளில் சுமார் பத்தாயிரம் பேருக்கு கொரோனா தொற்று. Reviewed by Madawala News on March 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.