மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களுடன் பள்ளிவாசல் மற்றும் வர்தக பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு.


அம்பாரை மாவட்ட இராணுவ
24ம் படை பிரிவு கட்டளை தளபதி - மேஜர் ஜெனரல் சிந்தக கமகே
அவர்களுடன் பள்ளிவாசல் மற்றும் வர்தக பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு

(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்மந்தமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும்
கலந்துரையாடல் நிகழ்வு கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கட்டிடமொன்றில் இன்று(29) மதியம் இடம்பெற்றது.


இந் நிகழ்வில் 24ம் பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தகே கமகே அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில்..


நாங்கள் எதிர்பார்ப்பது பொதுமக்கள் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதாகும். பொது மக்கள் ஊரடங்கு வேலையில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் போது பிரதேச செயலாளர் மூலம் வழங்குங்கள்.உங்களுக்கு எதும் பிரச்சினைகள் ஏற்படுமானால் பொலிசார் மூலம் சட்ட ரீதியாக அனுகுங்கள் .

கொரோனா வைரஸ் தொற்று
தொடர்பாக அரசாங்கம் வழங்கும் அறிவுற்றுத்தல்களை முழுமையாக முறையாக பின்பற்றினால் எமது பிரதேசத்தையும் எமது நாட்டை காப்பாற்ற முடியும்.மேலும் இவற்றை நீங்களும் மக்களுக்கு ஏத்திவையுங்கள்.

மேலும் நான் அறிந்த வகையில்
கோரானா தொற்று தொடர்பாக
கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப் தலைமையிலான குழுவினர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வை மேற்கொள்ளும் முகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டு விதி முறைகளை சிறப்பாக நடைமுறை படுத்தி வருகின்றனர் என்றார்.

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் , கல்முனை,சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள், மற்றும் பொலிஸ், இராணுவ பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின்,
பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றிருந்தனர்
மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களுடன் பள்ளிவாசல் மற்றும் வர்தக பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு. மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களுடன் பள்ளிவாசல் மற்றும் வர்தக பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு. Reviewed by Madawala News on March 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.