கொரோனா வைரஸ் தொற்றில் மரணம் சம்பவித்தால் (எந்த சமயத்தவர்கள் ஆக இருந்தாலும்) உடலை தகனம் செய்வது கட்டாயம்.

கொரோனா வைரஸ் உள்ளாகி நோயாளி ஒருவர் மருத்துவமனையில்
 மரணத்தை தழுவினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தர செயற்பாட்டு நடைமுறைகள் குறித்து சட்டம் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

கோவிட் 19 நோயினால் ஒருவர் மரணம டைந்தால் இந்த தர செயற்பாட்டு நடைமுறைகளின் பிரகாரம் அவர்கள் எந்த சமயத்தை சேர்ந்தவர்களாயின் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும்.

சட்ட மருத்துவ அதிகாரிகளின் திணைக் களத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை எக்னோமிக் நெக்ஸ்ட் இணையத்தளம் பார்த்திருப்பதாக கூறுகின்றது. 

அத்துடன் மரணம் தீவிர சிகிச்சைப் பிரி வில் அல்லது இந்த சிகிச்சைக்கான நோக்கத் துக்காக விசேட பிரிவில் சம்பவித்தால் பிரேத பரிசோதனை தேவைப்படாது எனவும் அதில் 
குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை இறந்தவர்களின் சடலங்கள் பொதியிடப்பட்டு நெருங்கிய உறுப்பினர்கள் சடலத்தை பார்ப்பதற்கு வரையறுக்கப்பட்ட காலமே வழங்கப்படும். 

பார்வையிடுவதும் மருத்துவமனை வளாகத்தின் உட்புறத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். உறவினர் க ளுக்கு 
முக வசனங்கள் வழங்கப்படும்

இறந்தவரின் முகம் மட்டுமே மூடப்பட்டி ருக்காது. உடலை தொடுவதற்கு அனுமதி வழங்கப்படாது. அதன் பின்னர் சடலம் இறுதிகிரியை மேற்கொள்வோரிடம் கைய ளிக்கப்படும்.

பிரேத பரிசோதனை செய்வது தடை செய் யப்பட்டுள்ளது. அத்துடன் இறந்தவரின் இல்லத்திலோ ஏனைய இடங்களில் இறுதி கிரிகைகளை மேற்கொள்வது நோய் பரவுவ தற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேவேளை சீல் பண்ணிய பூதவு டல் தாங்கிய பேளை மலர்சாலையில் அல் லது இல்லத்தில் சமய கிரியைகளுக்காக மட் டும் வைக்க முடியும். அதேவேளை இறுதி கிரியைகளில் மக்கள் ஒன்றுகூட அனுமதிக்க முடியாது

இதே வேளை நேற்று   வரை கொரோனா வைரஸ் தொற் றுக்கு 102 பேர் இலக்காகி இருப்பதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 

அவர்களில் 2 பேர்  தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் ஆபத்தான நிலையில் இருவர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேவேளை நால்வர் குணமடைந்திருப்பதாக சீன சுற்றுலா பணிகள் மட்டுமே மருத்துவ மனையை விட்டு சென்றியிருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்னும் கொரோனா வைரஸ் மரணம் நிகழவில்லை என்பதும் நோய தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடைந்து வெளியேறுவதும்
 ஆறுதலான ஒரு செய்தி.

கொரோனா வைரஸ் தொற்றில் மரணம் சம்பவித்தால் (எந்த சமயத்தவர்கள் ஆக இருந்தாலும்) உடலை தகனம் செய்வது கட்டாயம். கொரோனா வைரஸ் தொற்றில் மரணம் சம்பவித்தால் (எந்த சமயத்தவர்கள் ஆக இருந்தாலும்) உடலை தகனம் செய்வது கட்டாயம். Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.