புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்.புத்தளம் மாவட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் 
அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 4.30 முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

அந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (18) பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சற்றுமுன்னர் தெரிவித்தார்.

அதன்படி, புத்தளம் மாவட்டத்திற்குரிய கருவலகஸ்வெவ, வனாதவில்லுவ, நவகத்தேகம, முந்தளம், உடப்புவ, சாலியவெவ மற்றும் நுரைச்சோலை அகிய பிரதேசங்களுக்கு இன்று (18) பிற்பகல் 4.30 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நீர்க்கொழும்பு பிரிவின் கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கும் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம். புத்தளம் மாவட்டத்தில்  பொலிஸ் ஊரடங்கு சட்டம். Reviewed by Madawala News on March 18, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.