சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் கையளிக்கப்பட்ட மு.க. மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனு.2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியல் இன்று 19.03.2020 காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கட்சியின் பொதுச் செயலாயளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் கையளிக்கப்பட்டது.


இதன் போது வேட்பாளர்களான கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான ZA.நஸீர் அஹமட், முன்னாள் ராஜாங்க அமைச்சர் செய்யத் அலி ஸாஹிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினர்  பொறியலாளர் ஷிப்லி பாருக், சட்டத் தரணி ஹபீப் றிபான், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். 

வேட்பு மனு கையளிப்பின் பின்
கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் எமது கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கௌரவ தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் தீர்மானத்துக்கு அமைவாக களமிறங்கியுள்ளது என்பதனை நினைவூட்டுகின்றோம்.

எமது மாவட்டத்தில் மிக இலகுவாக மரச்சின்னம் ஆசனத்தை பெரும் என்ற நம்பிக்கையோடு காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை போன்ற பிரதேசங்களில் வசிக்கும் எமது கட்சியின் போராளிகளுக்கு எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக அழைப்பு விடுக்கின்றேன்.

மேலும் மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் MHM. அஷ்ரப் காலம் முதல் இன்று வரை இம்மாவட்டத்தில் தொடராக பெற்றுவரும் எம் பிரதிநிதிதுவத்தை பாதுகாத்திட எமது மாவட்ட மக்கள் இத்தேர்தலில் பிரதேச வாதங்களையும் ஊர் வாதங்களையும் புறம் தள்ளி ஒன்று பட்டு வாக்களித்து எமது ஒற்மையை வெளிப்படுத்துவோம் என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது..
சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் கையளிக்கப்பட்ட மு.க. மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனு. சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் கையளிக்கப்பட்ட மு.க. மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனு. Reviewed by Madawala News on March 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.