அக்குறணை மக்களின் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஒரு தடையும் இருக்காது.


-இக்பால் அலி-
அக்குறணை முடக்கப்பட்டு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் அக்குறணை மக்களின்
அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஒரு தடையும் இருக்காது என்று முன்னாள முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.


அக்குறணை நிலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஹலீம் மற்றும் அக்குறணை பிரதேச பிரதேச செயலாளர்  ஏ. எச். எம். இந்திக குமாரி ஆபேசிங்க ஆகிய இருவருக்கிடையிலான  பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அதன் பின்னர்   ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது முன்னாள் அமைச்சர் ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர்  தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
ஒரு இக்கெட்டான கால கட்டத்தில் அக்குறணை பிரதேச செயலாளர் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டுள்ளார். அவர் முன்னெடுத்துள்ள சேவைகளுக்கு நான் மனமுவந்து பாராட்டுவதுடன் பெருமிதம் அடைகின்றேன். அக்குறணை மக்களின் பிரச்;சினைகளுக்கு மிகவும் மதி நுட்பத்துடன் கையாண்டு அக்குறணை மக்களுக்குத்  தேவையான  அத்தனை அத்;தியாவிசயப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையை அவர்  எடுத்து;ள்ளார்.


இன்று இருந்து சகல அத்தியாவசியப் பொருட்களையும் மக்களின் காலடிக்கு கொண்டு செல்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 13 மொத்த பலசரக்குக் கடை வியாபாரிகளுக்;கு நான்கு வாகனங்களைப் பாவித்து வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளார். எரிவாயுக்களை விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக முச்சக்கர வண்டியொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அதே போன்று அன்றாடம் மரக்கறி வகைகள் விற்பனை செய்வதற்காக மூன்று மொத்த வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருந்து வகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக  நான்கு பாமசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை மோட்டார் சைக்கிலில் சென்று விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


உலக மயப்பத்தப்பட்ட இந்நோயின் அச்சறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியவை என்பது தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

இந்த  இக்கெட்டான நிலைமைகள் வரும் போது மிகவும் பொறுமையாகவும்  நாட்டுச் சட்டத்தைப் பின்பற்றி நாம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். நாம் எலலோரும் கொடிய நோயில் இருந்து விடபட அல்லாஹ்விடம் துஆப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி
அக்குறணை மக்களின் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஒரு தடையும் இருக்காது. அக்குறணை மக்களின் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஒரு தடையும் இருக்காது. Reviewed by Madawala News on March 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.