"எமது அயலவரை அரவணைப்போம்" - கொரோனா வைரஸ் தாக்கத்தால் வீடுகளுக்குள் முடங்கிய ஏழைகளுக்கு உலர் உணவு விநியோகம்.


இலங்கையில் வேகமாக பரவிவரும் கொரோனா (COVID 19) வைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாக
அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. அதற்கமைவாக 2020.03.20 ஆம் திகதி முதல் 2020.03.23 ஆம் திகதி வரை அமுல்படுத்தியுள்ள ஊடரங்குச் சட்டத்திற்கு மக்கள் முழுமையாக் கட்டுப்பட்டு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது கட்டாயக் கடமையாகும்.


மேற்படி சட்டத்தை மதிக்கும் பொருட்டு அரச ஊழியர்கள், செல்வந்தர்கள், மாதாந்தம் சம்பளம் பெருபவர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியவசியப்பொருட்களை கொள்வணவு செய்துகொள்ளத் துவங்கினர்.


இதற்குமத்தியில் நாளாந்தம் கூலிவேலை செய்பவர்கள், அன்றாட வருமானம் பெருபவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வணவு செய்துகொள்ள கஷ்டப்படுவதைக் கண்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகம ஊழியர்கள், அவர்களது பிரதேசத்தில் வாழும் வரியவர்களுக்காவது ஒரு ஏற்பாட்டைச் செய்து கொடுக்கவேண்டும் என்று கருதினர். அப்பிரதேச்தில் உள்ள வசதிபடைத்தவர்களை அணுகி மேற்படி விடயமாக கலந்துரையாடியனர்.


இதன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்ட அவர்கள் இதனை முன்னெடுக்குமாறு வளியுறுத்தியதற்கு அமைய வாடியதன்ன ஹிஜ்ராகம, கொடேகொட கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்குத்தேவையான அத்தியவசியப் பொருட்களை வினியோகிகத்தனர். அக்கிராமத்திலுள்ள வசதி படைத்தவர்களின் உதவியோடு ரூபா 1500 பெருமதியான 240 பொதிகள் வினியோகிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.


மேற்படி செயற்திட்டம் 20 ஆம் திகதி காலை 10 மணியளவில் தீர்மானிக்கப்பட்டு ஏரத்தாள 8 மணித்தியாலத்துக்குள் செய்துமுடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இதற்காக பூரண ஒத்துழைப்பு வழங்கிய வாடியதன்ன, ஹிஜ்ராகம, கொடேகொட மஸ்ஜித் நிர்வாகத்தினர், ஆலோசனை வழங்கியவர்கள், பணத்தால் உதவியவர்கள், உடல் உழைப்பால் ஒத்துழைத்தவர்கள அனைவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.


மேற்படி வேலைத்திட்டமானது ஒரு சிறந்த முன்மாதிரியாக இருப்பதோடு இதனை இலங்கையில் உள்ள ஏனைய கிராமங்களும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கலாம் என்பதை ஆலோசனையாக முன்வைக்கின்றோம்.


"எமது அயலவரை அரவணைப்போம்" - கொரோனா வைரஸ் தாக்கத்தால் வீடுகளுக்குள் முடங்கிய ஏழைகளுக்கு உலர் உணவு விநியோகம். "எமது அயலவரை அரவணைப்போம்" -  கொரோனா வைரஸ் தாக்கத்தால் வீடுகளுக்குள் முடங்கிய ஏழைகளுக்கு உலர் உணவு விநியோகம். Reviewed by Madawala News on March 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.