கண்டி - தாருல் உலூம் அல் புர்கானியா அரபுக் கல்லூரியின் கட்டிடத்தை கொரோனா அவதான நிலையமாக வழங்க முன் வந்தது மிகவும் பெருமைக்குறிய விடயம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

கண்டி - தாருல் உலூம் அல் புர்கானியா அரபுக் கல்லூரியின் கட்டிடத்தை கொரோனா அவதான நிலையமாக வழங்க முன் வந்தது மிகவும் பெருமைக்குறிய விடயம்.


இக்பால் அலி
கண்டி கட்டுக்கலை தாருல் உலூம் அல் புர்கானியா அரபுக் கல்லூரியின் கட்டிடத்தை கண்டி
தேசிய வைத்தியசாலைக்கு தனிமைப் படுத்தி  சுய நிவாரணம் பெற்றுக் கொள்ளும் நிலையமாக வழங்க முன்வந்தமை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விடயமாகும் என்று முன்னாள் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். எச். ஹலீம் தெரிவித்தார்.


முன்னாள் அமைச்சர் ஹலீம் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
கொரேனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில்  தனிமைப்படுத்தி ; தங்க வைத்து சுய நிவாரணம் பெற்றுக் கொள்ளும் நிலையமாக கண்டி கட்டுக்கலை தாருல் உலூம் அல் புர்கானியா அரபுக் கல்லூரியின் கட்டிடத்தை கண்டி தேசிய வைத்தியசாலைக்கு வழங்க கண்டி கட்டுக்கலை ஜம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அரபுக் கல்லூரி நிர்வாகம் முன்வந்துள்ளமை என்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். 


கண்டி லைன் பள்ளி பெரிய பள்ளிவாசல்  மற்றும்  கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து  தேசிய வைத்தியசாலைக்கு பெறுமதி வாய்ந்த நவீன மருத்துவ  உபகரணங்கள், கொரோனா வைரஸ் தோற்றலை தடுக்கும் வைத்தியர்கள் அணியும் உடைகள், 2500 முகக் கவசங்கள் ஆகிய பொருள்கள் வைத்தியசாலைக்கு  வழங்கி வைத்தார்கள்.


அதேவேளையில் காவல் துறை ஊரடங்கு சட்டத்தினால் இன்று   எத்தனையோ வறுமைக் கோட்டில் வாழும்; மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். அந்த நிலை அறிந்து அக்குறணை அஸ்னா ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் சிங்கள ,முஸ்லிம் , தமிழ், கிறிஸ்தவ சமய வேறுபாடுகளின்றி  உலருணவுப் பொதிகளை வழங்கி வருகின்றார்கள். கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம்,. கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபை, கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், பள்ளிவாசல்களுடைய நிர்வாக சபையினர்கள் உள்ளிட்ட பல சிவில் அமைப்புக்கள் தம்மால் இயன்ற வகையில் முடிந்தளவு பங்களிப்பை இன சமய வேறுபாடுகளின்றி தியாக மனப்பான்மையுடன் தங்களுடைய பங்களிப்பை நல்கிவருகிறார்கள். உண்மையிலேயே மனிதாபினமான செயற்பாட்டின் உயரிய நோக்கத்தை உணர்ந்து முஸ்லிம் சமூக சிவில் அமைப்புக்கள் செயற்படுவதையிட்டு நான் மிகவும் இரட்டிப்பு மகழ்ச்சியடைகின்றேன். இறைவன். இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய நற்சேவைகளைப் பொருந்திக் கொள்ள வேண்டும்.


குறிப்பாக அரபு மத்ரசாக்களைப் பற்றி பெரும்பான்மையின சகோதரர்கள் மத்தியில் பல சந்தேகங்களையும் தப்பபிப்பராங்களை ஒரு சிலர் தோற்றிவித்திருந்தார்கள். மாணவர்கள்களுக்கு  இஸ்லாமிய மார்க்கக் கல்வி புகட்டுவதற்காக  மிக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த அரபுக் கல்லூரியின் கட்டிடத்தை தனிமைப்படுத்தும் நிலையமாக வழங்கியமை ஒரு மகத்தான பணியாகும்.

 இது பாரெங்கும் பறைசாற்றப்படும் பணி.
மக்களுடைய ஆரோக்கியமான நல்வாழ்வுக்கும் அவர்களுடைய உணவுப் பசியைத் தீர்ப்பதற்கும் முஸ்லிம் சிவில் சமூகம் துவண்டு விடாமல் தொடர்ந்து மனிதாபிமானப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி
27-03-2020
கண்டி - தாருல் உலூம் அல் புர்கானியா அரபுக் கல்லூரியின் கட்டிடத்தை கொரோனா அவதான நிலையமாக வழங்க முன் வந்தது மிகவும் பெருமைக்குறிய விடயம். கண்டி - தாருல் உலூம் அல் புர்கானியா அரபுக் கல்லூரியின் கட்டிடத்தை கொரோனா அவதான நிலையமாக வழங்க முன் வந்தது மிகவும் பெருமைக்குறிய விடயம். Reviewed by Madawala News on March 27, 2020 Rating: 5