வர்த்தக நடவடிக்கைகள் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில்: நிபந்தனைகளை மீறினால் சட்ட நடவடிக்கை


(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினால் 
அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டம் நாளை (26.03.2020) காலை 6.00மணிக்கு தளர்த்தப்பட்டு நன்பகல் 12.00மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.


ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த நேரத்திற்குள் முண்டியடித்து கொண்டு பொருள் கொள்வனவு செய்யும் போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் மிக அதிகமாக இருப்பதை அவதானித்து பாதுகாப்பு தரப்பினரும், சுகாதார பிரிவும் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளதோடு இவ்வாறான நிலைமை நாளையும் காணப்படின் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட மக்களின் நலன்கருதி பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.

ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை சந்தை மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் சனநெரிசலை குறைத்து பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக மரக்கரி, தேங்காய் போன்ற அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிரந்தர, தற்காலிக கடைகள் மற்றும் நடமாடும் வியாபாரம் அனைத்தும் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மரக்கரி தவிர்ந்த மீன், இறைச்சி மற்றும் ஏனைய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தொடர்ந்தும் தற்போது விற்பனை செய்யும் இடத்திலேயே விற்பனை செய்தல் வேண்டும்.

பொருள் விற்பனை மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளை ஈடுபடும் வியாபாரிகளும் மற்றும் பொதுமக்களும் கையுறை, முகக் கவசம் அணிந்திருத்தல் அவசியம்.

கொள்வனவு நடவடிக்கைக்காக குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் கடைகளுக்கு செல்லுதல் வேண்டும்.

வியாபார நடவடிக்கைகளின் போது ஒவ்வொரு தனிநபர்களுக்கிடையிலும் ஒரு மீற்றர்க்கு குறையாத இடைவெளி இருத்தல் வேண்டும்.

அத்தியவசிய பொருட்களின் விலை அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையினை மீற முடியாது.

வாகனங்கள், சைக்கிள்கள் என்பன புகையிரத வீதிக்கு அருகில் உள்ள தரிப்பிடத்திலும், மைதானத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலும் நிறுத்துதல் வேண்டும்.

இவ்வறிவித்தலை மீறிச் செயற்படும் வியாபாரிகள், பொதுமக்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளதை கவலையுடன் அறியத்தருகின்றேன் என்று தவிசாளர் அறிவித்துள்ளார்.

வர்த்தக நடவடிக்கைகள் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில்: நிபந்தனைகளை மீறினால் சட்ட நடவடிக்கை வர்த்தக நடவடிக்கைகள் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில்: நிபந்தனைகளை மீறினால் சட்ட நடவடிக்கை  Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.