எதிர்வரும் நாட்களுக்கு இலங்கையின் அனைத்து பிர தேசங்களுக்குமான ஊரடங்கு சட்ட விபரம் - Madawala News Number 1 Tamil website from Srilanka

எதிர்வரும் நாட்களுக்கு இலங்கையின் அனைத்து பிர தேசங்களுக்குமான ஊரடங்கு சட்ட விபரம்* கொழும்பு ,கம்பஹா , களுத்துறை மாவட்டங்களில் இப்போது 
அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல்வரை தொடரும்..

* யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , புத்தளம் , மன்னார் , முல்லைத்தீவு , வவுனியா ஆகிய மாவட்டங்களில் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளரத்தப்படும் ஊரடங்கு அன்று பிற்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும்.

* இதர மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 12 மணிக்கு அமுலுக்கு வந்து மறு அறிவித்தல் வரை தொடரும்.

ஊரடங்கு நேரத்தில் ஊடக மற்றும் அத்தியாவசிய சேவைகள் இயங்கும். மாவட்டத்தை விட்டு மாவட்டம் யாரும் செல்ல முடியாது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இடம்விட்டு இடம் மாற்ற முடியாது. விவசாயிகள் – சிறு தேயிலை தோட்ட மற்றும் ஏற்றுமதி உப உணவுப் பயிர் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.விமான நிலையம் மற்றும் துறைமுக செயற்பாடுகள் இருக்கும்.

– ஜனாதிபதி செயலகம்  எதிர்வரும் நாட்களுக்கு இலங்கையின் அனைத்து பிர தேசங்களுக்குமான ஊரடங்கு சட்ட விபரம் எதிர்வரும் நாட்களுக்கு இலங்கையின் அனைத்து  பிர தேசங்களுக்குமான ஊரடங்கு சட்ட விபரம்   Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5