அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை கைப்பற்றும்- சட்டமுதுமானி வை.எல்.எஸ் ஹமீட்பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் நாங்கள்  ஒரு  ஆசனத்தை இம்முறை  பெற கூடிய சந்தர்ப்பங்கள்
இருக்கின்றன  என அகில இலங்கை  மக்கள்  காங்கிரஸின்   முக்கியஸ்தரும் முதன்மை வேட்பாளருமான  சட்டமுதுமானி வை.எல்.எஸ்  ஹமீட் தெரிவித்தார்.

2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்  வேட்பு மனுக்கள்  செய்த பின்னர் வியாழக்கிழமை (19)   ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மக்கள் பாரிய ஆதரவினை தருவதாக தெரிவித்துள்ளனர்.அதாவது எப்படியாவது ஆசனமொன்றை எமது கட்சி பெற்றுக்கொள்ளும்.அத்துடன் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் எங்களுக்கு ஒரு சவாலாக அமையப் போவதில்லை. 

அனைத்து  கட்சிகளுக்கும் நாங்கள் தான் இம்முறை  சவாலாக அமைவோம் . கடந்த  பாராளுமன்ற  தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் பெருவாரியான வாக்குகளை  எமக்கு  மக்கள் அளித்துள்ளமை  யாவரும் அறிந்தமையே.எனவே இம்முறை அதிக   வாக்குகளுடன் எமது கட்சி வெற்றி பெறும் என்றார்.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை கைப்பற்றும்- சட்டமுதுமானி வை.எல்.எஸ் ஹமீட் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  ஒரு  ஆசனத்தை கைப்பற்றும்-   சட்டமுதுமானி வை.எல்.எஸ்  ஹமீட் Reviewed by Madawala News on March 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.