இன்று காலை ஊரடங்கு சட்டம் முடியும் வரை காத்திருப்பவரா நீங்கள்? 🚫 அதற்கு முன் இதனை கட்டாயம் வாசிக்கவும்.


இத்தாலியின் நோயாளர் J வரைபை விட இலங்கையின் நோயாளர் வரைபு 
மாற்றிவிட்டதாம் தானே?

இலங்கை புள்ளிவிபரங்கள் நோயாளிகள் குறைந்து கொண்டு செல்வதை காட்டுகிறது தானே?

கேட்கவே சந்தோசமாக இருக்கிறதே? 
ஆம் அது அப்படியே கீழே இறங்கி பூச்சியமாகிவிட்டால் எல்லாருக்கும் சந்தோசம் தான்.


நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்த பட்டதும் முக்கியமான வேலைகளை முடித்தது விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர் தானே நீங்கள்.

அப்படியாயின் இதனையும் கொஞ்சம் உங்கள் சிந்தனைக்கு எடுங்கள்.


தற்போது இலங்கையில்  கண்டுபிடிக்கப்பட்ட தொகை 82+1 சீன பெண்ணுடன்,  சந்தேகிக்கப்படும் நோயாளிகள் 222   எனினும் ஒருநாளைக்கு பரிசோதிக்கப்படும் நோயாளிகள் ஆய்வுக்கூடங்களில் டெஸ்ட் பண்ணக்கூடிய உயர்ந்த பட்ச எண்ணிக்கை உள்ளது. MRI இல் 20 -25  மற்றைய 4  ஆய்வுகூடங்களும்  3  நாட்களுக்கு முன்னரே செயட்பட தொடங்கியது.


இந்தியாவில் COVID 19  நோயாளர் தொகை இன்று 300  ஐ தாண்டி இருக்கிறது. இதில் என்ன முக்கியம் என்றால் முதல் 50 பேரும் கண்டுபிடிக்கப்பட 41  நாட்கள் எடுத்தது 51 ம் நாள் 50 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர் 52 ம் நாள் 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டு இன்று 300 ஐ தாண்டியது.

கல்கிஸ்ஸை மாணிக்க வியாபாரி கண்டுபிடிக்க பட்டது எப்போது?

ராயல் கல்லூரி தாமஸ் கல்லூரி கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்ற நோயாளி கண்டு பிடிக்கப்பட்டது எப்போது?

வாரகாபொல மந்திரி?
ராகம சொல்லாமல் இருந்த நோயாளி?

யாழ்ப்பாண church கு சென்றவர்களில் முதலாவது நோயாளி?

எல்லாம் நடந்தது மார்ச் 12  இன் பின்னர் தானே? 

இது ஒருவரிடம் இருந்து பரவி மற்றோருவருக்கு நோய் ஏட்பட 14  நாட்கள் எடுக்கிறது தானே? இத்தாலியில் இது 16 - 28 நாட்களின் பின்னரும் நோய் அறிகுறியை காட்டி உள்ளது

இன்று திகதி மார்ச் 22 . கணக்கிட்டு பார்த்தால் இன்னும் கொரோனா அவரின் வேலையை காட்ட தொடங்கவில்லை. இன்னும் அவரது பரிவாரங்களை ஆயத்தம் செய்கிறது. நாம் சற்றும் எதிர்பார்க்காத தாக்குதல் ஒன்றை ஏட்படுத்தக்கூடிய சூழல் தான் இன்று காணப்படுகிறது. நாம் நடந்து கொள்ளும் முறை!!

சற்று சிந்தியுங்கள் சுனாமி வருமுன் கடல் பின்னோக்கி சென்றது எமக்கு நினைவிருக்கும். எவ்வளவு அழகாக இருந்தது. மக்கள் சிலர் போட்டோ எடுத்தனர், சிலர் மீன்பிடிக்க சென்றனர் . எனினும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அது திருப்பி தாக்கியது நினைவிருக்கும். 

ஆகவே நோய் ஏட்பட்டவர்களில் இருந்து ஆரம்பிக்கும் தோற்று நோயாளர்கள் ஆரம்பிப்பது மார்ச் 26  இன் பின்னர். ஏப்ரல் முதல் இரு வாரங்களும் மிக முக்கியமானவை. 
இதை இன்னும் முன்னோக்கி பரவ விடுவதா அல்லது இத்தோடு நிறுத்தி விடுவதா என்ற தீர்மானிக்கும் சக்தி நீங்களே.

எனவே மக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம், வீட்டிலேயே தங்கி இருங்கள், கைகளை அடிக்கடி கழுவுங்கள், வெளியில் செல்லும் போது முடியுமானால் மாஸ்க் ஒன்றினை அணியுங்கள், கை சுத்திகரிப்பான் ஒன்றை எந்நேரமும் வைத்திருங்கள், கடைகளுக்கு சென்றால் 1m இடைவெளியை பேணுங்கள், நாட்டு சட்டத்தை மதியுங்கள் .

நான் எவ்வளவு எழுதினாலும், மீடியாக்கள் எவ்வளவு அறிவுறித்தினாலும் தீர்மானம் உங்கள் கையில். 
கட்டாயம் இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள் 

HSM Ihthisham 
Medical Laboratory Scientist 
MSc in Medical Microbiology(Reading)
இன்று காலை ஊரடங்கு சட்டம் முடியும் வரை காத்திருப்பவரா நீங்கள்? 🚫 அதற்கு முன் இதனை கட்டாயம் வாசிக்கவும். இன்று  காலை ஊரடங்கு சட்டம் முடியும் வரை காத்திருப்பவரா நீங்கள்?   🚫 அதற்கு  முன் இதனை கட்டாயம் வாசிக்கவும். Reviewed by Madawala News on March 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.