மேலும் பல சலுகைகளை ஜனாதிபதி அறிவித்தார்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

மேலும் பல சலுகைகளை ஜனாதிபதி அறிவித்தார்..வெட் வருமான வரி மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் என்பன ஏப்ரல் மாதம் 30 ஆம்
திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்த நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் மற்றும் 50000 ரூபாவுக்கு குறைவான மாத நிலுவை உள்ள கடன் அட்டை கட்டணம் செலுத்துவதற்கான கால எல்லையும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் முட்சக்கர வண்டிகளுக்கான லீசிங்கை செலுத்த  ஆறு மாத சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கு குறைவான தனிப்பட்ட கடன்பெற்றுள்ளவர்களிடம் அதனை மூன்று மாதங்களுக்கு அறவிடக்கூடாது என வங்கிகளுக்கு மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறுவுருத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அத்தியவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளன.வருமானம் குறைந்த குடும்பங்கள் தொடர்பான  தரவுகளை பெற்றுக்கொள்ளும்படி சமுர்த்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ” கொவிட் 19 -சுகாதார சமூகப் பாதுகாப்பு நிதியம் ” ஒன்றை ஆரம்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

கொரோனா ஒழிப்புச் செயற்பாடுகளுக்காக இந்த நிதியத்தின் ஊடாக முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல சலுகைகளை ஜனாதிபதி அறிவித்தார்.. மேலும் பல சலுகைகளை ஜனாதிபதி அறிவித்தார்.. Reviewed by Madawala News on March 23, 2020 Rating: 5