தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு விஷேடமாக தயாரிக்கப்பட்ட (Anti Viral Choorana) யூனானி மருந்துப் பொதிகள் வழங்கி வைப்பு


பைஷல் இஸ்மாயில் - 
நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றுக் கிருமியை எதிர்கொள்ளும்
Safoof Josand (Anti Viral Choorana) என்ற யூனானி மருந்துப் பொதிகளை கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி எம்.ஏ.நபிலினால் கல்முனை பாராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணனிடம் இன்று (27) கையளித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சாரின் பணிப்புரைக்கமைவாக சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதரின் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணனின் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று முகம்மதியாபுரம் மருந்து உற்பத்திப் பிரிவில் தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக வேண்டி Safoof Josand (Anti Viral Choorana) என்ற யூனானி மருந்துப் பொதிகள் விஷேடமாக தயாரிக்கப்பட்டது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட 400 பொதிகளையே கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி எம்.ஏ.நபிலினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

விஷேடமாக இந்த மருந்துப் பொதிகளை தயாரிப்பதற்காக வேண்டி அயராது பாடுபட்ட அக்கரைப்பற்று முகம்மதியாபுர மருந்து உற்பத்திப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி யூ.எல்.நிஹாயா உள்ளிட்ட அங்கு கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியினை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று வைத்திய கலாநிதி எம்.ஏ.நபில் தொரிவித்தார்.
தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு விஷேடமாக தயாரிக்கப்பட்ட (Anti Viral Choorana) யூனானி மருந்துப் பொதிகள் வழங்கி வைப்பு தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு விஷேடமாக தயாரிக்கப்பட்ட  (Anti Viral Choorana) யூனானி மருந்துப் பொதிகள் வழங்கி வைப்பு Reviewed by Madawala News on March 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.