இத்தாலியில் இன்று 662 பேர் பலி ! - Madawala News Number 1 Tamil website from Srilanka

இத்தாலியில் இன்று 662 பேர் பலி !இத்தாலியில் கொரோனா வைரஸின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை
தற்போது 80,539 ஆக அதிகரித்துள்ளது . நேற்று இந்த தொகை  74,386ஆக இருந்தது.

உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளர்களின்  எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டி உயர்ந்துள்ளதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 662  பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, 651 பேர் இறந்தனர், தொடர்ந்து சனிக்கிழமை 793 பேரும், வெள்ளிக்கிழமை 627 பேரும் இறந்தனர்.

அங்கு 8165 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், நாடு முழுவதும் முதலில் பாதிக்கப்பட்டவர்களில், 8432 பேர்  முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இத்தாலியில் இன்று 662 பேர் பலி ! இத்தாலியில் இன்று 662 பேர் பலி ! Reviewed by Madawala News on March 26, 2020 Rating: 5