கொரோனாவை எதிர்த்து போராட இலங்கை உள்பட 64 நாடுகளுக்கு $174 Million அமெரிக்கா நிதியுதவி!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயை
 எதிர்த்துப் போராட இலங்கைக்கு $1.3 Million ( சுமார் 25 கோடி ரூபா ) உட்பட, 64 நாடுகளுக்கு $174 Million ( சுமார் 3,345 கோடி ரூபா ) நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.  


கடந்த பிப்ரவரியிலும் $100 Million ( சுமார் 1,850 கோடி ரூபா ) சீனா உள்பட ஏனைய நாடுகளுக்கு நிதியுதவியை அமெரிக்கா அறிவித்தது.


கொரோனா வைரஸ் அபாயம் அதிகமுள்ள நாடுகளில், நோய் பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க, கூடுதலான நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.


இந் நிதியுதவி, ஆய்வு கூடங்களை உருவாக்கவும், கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறியவும், தொழில்நுட்ப நிபுணர்களை தயார்நிலையில் வைத்திருப்பதற்காகவும் வழங்கப்படுகிறது.  


இதேபோல், இந்தியாவுக்கு $2.9 Million ( சுமார் 55 கோடி ரூபா ) , நேபாளத்திற்கு $1.8 Million ( சுமார் 35 கோடி ரூபா ) பங்களாதேஸிற்கு $3.4 Million ( சுமார் 65 கோடி ரூபா ) , ஆப்கானிஸ்தானிற்கு $5 Million ( சுமார் 95 கோடி ரூபா ) வரை அமெரிக்கா நிதியுதவியை அறிவித்துள்ளது.
கொரோனாவை எதிர்த்து போராட இலங்கை உள்பட 64 நாடுகளுக்கு $174 Million அமெரிக்கா நிதியுதவி! கொரோனாவை எதிர்த்து போராட இலங்கை உள்பட 64 நாடுகளுக்கு $174 Million அமெரிக்கா நிதியுதவி! Reviewed by Madawala News on March 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.