நாட்டில் 552 கோரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் ; GMO



இலங்கையில் 550 பேருக்கு கொரோனா: அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கணிப்பீட்டில் தகவல்!


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி இலங்கையில் சுமார் 550 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதன்படி, பொது வெளியில் நடமாடுபவர்களாக இருந்தால் அவர்களுடன் சுமார் 19,000 பேர் தொடர்புகளைப் பேணியிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான நிலைமை காணப்பட்டால் அது இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் இன்று (25) புதன்கிழமை நண்பகல் வரை 101 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுப்படுத்தப்பட்டிருந்தது.


இவர்களில் 32 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து விமான நிலையத்தில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்டு அங்கிருந்து நேரடியாக தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவர்களாவர். ஏனைய 69 பேரும் தொற்றுக்குள்ளானோரிடம் தொடர்புகளைப் பேணியதால் பாதிக்கப்பட்டோராவர்.


ஒரு கணிப்பீட்டின்படி 550 பேர் இலங்கையில் கொரோன தொற்றுக்குள்ளாகியிருக்கக் கூடும் எனபதோடு இவர்கள் பொது வெளியில் நடமாடுபவர்களாகவும் இருக்கலாம்.


இந்த 550 பேரும் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையங்களிலோ அல்லது சாதாரணமாக வீடுகளில் இருப்பவர்களிலும் உள்ளடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 552 கோரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் ; GMO நாட்டில் 552 கோரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் ; GMO Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.