சவுதி அரேபியாவில் இன்று மாலை முதல் 21 நாட்கள் ஊரடங்கு சவுதி மன்னர் அறிவிப்பு!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ், 
இன்று மாலை முதல் 21 நாட்கள் நாட்டில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.


சவுதிஅரேபியாவில் கொரோனாவிற்கு 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடுத்த கட்டமாக சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ், இன்று மாலை முதல் 21 நாட்கள் நாட்டில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். ஊரடங்கு உத்தரவின் கீழ் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் காலை 7 மணி முதல் காலை 6 மணி வரை தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்ல வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த சவுதி உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும், மேலும் இது தொடர்பாக அனைத்து உள்ளுர் மற்றும் ராணுவ அதிகாரிகளும் அமைச்சகத்துடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று சவுதி அரேபியா பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது குடிமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், தடையில்லாத நேரத்தில் தீவிர தேவை ஏற்பட்டால் தவிர, வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

ஏனெனில் பொதுமக்களுடைய சுகாதாரத்தை பாதுகாப்பது மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாக மாறியுள்ளது, மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான அபாயத்திற்கு தங்களையும் சவுதி அரேபியாவையும் உள்ளாக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் இன்று மாலை முதல் 21 நாட்கள் ஊரடங்கு சவுதி மன்னர் அறிவிப்பு! சவுதி அரேபியாவில் இன்று மாலை முதல் 21 நாட்கள் ஊரடங்கு சவுதி மன்னர் அறிவிப்பு! Reviewed by Madawala News on March 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.