கொரோனா வைரஸ் உயிரிழப்பு உலகளவில் 18810 ஆனது.. தமிழ் நாட்டிலும் ஒருவர் பலி.

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்,
 தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. மொத்தமாக 4 லட்சத்து 21 ஆயிரத்து 413 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6820 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தோற்றுவாயான சீனாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,277ஆக உள்ளது. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 81 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 18810 ஆக உயர்ந்துள்ளது. நான்கு லட்சத்திற்கும் மேல் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடான இத்தாலியில், நேற்று(மார்ச் 24) ஒரே நாளில் 743 பேர் பலியானதையடுத்து, அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,820ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,176 ஆக உள்ளது. புதிதாக 5,249 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 519 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.24 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

உலகளாவிய உயிரிழப்பு விபரங்கள் ..

Italy: 6820
China: 3277
Spain: 2808
Iran: 1934
France: 1100
US: 705
UK: 422
Netherlands: 277
Germany: 157
Switzerland: 130
Belgium: 122
South Korea: 120
Indonesia: 55
Brazil: 46
Japan: 42
Sweden: 40
Turkey: 37
Philippines: 35
Denmark: 32
Portugal: 30

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முதல் நபர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு காரணமாக மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தினார்.

வெளிநாடு அல்லது வெளிமாநிலம் சென்று வராமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் ஆவார். இவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் தொடர்பான நீண்டகால நோய் பிரச்னைகள் மிகவும் தீவிரமாக இருந்து வந்ததாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸுக்கு முதல் முறையாக ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த ஒருவா் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதீனா நகரில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையாக சவூதி அரேபியாவில் 205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின்: முதியோா் இல்லத்தில் சடலங்கள்

ஸ்பெயினில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக முதியோா் இல்லங்களில் கிருமிநாசினிகளைத் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினா், சில இல்லங்களில் முதியோா்களின் சடலங்கள் கவனிப்பாரற்றுக் கிடப்படைக் கண்டு அதிா்ந்தனா்.

உயிரிழந்த அனைவரும் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அந்த வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அந்த முதியோா் இல்லங்களின் நிா்வாகிகள் அவற்றில் வசிப்பவா்களைக் கைவிட்டுச் சென்றதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்

சீனாவில் புதிதாகத் தோன்றியுள்ள ஹன்ட்டா என்ற வைரஸுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.

சீனாவில் தோன்றிப் பரவி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸுக்கே இன்னமும் முடிவு காணப்படாத நிலையில், தற்போது அதே சீனாவில் புதிதாக ஒரு வைரஸ் தோன்றியுள்ளது.

யுனான் நகரில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தித் தாளின் அதிகாரபூர்வ சுட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சுட்டுரைத் தகவலின்படி, ஷான்டோங் மாகாணத்தில் யுனான் மாகாணத்தில் பணிபுரிந்துவந்த ஒருவர், திங்கள்கிழமை, ஷான்டோங் மாகாணத்துக்குத் தனிப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்திலேயே உயிரிழந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் ஹன்ட்டா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் பயணம் செய்த 32 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சோதனை முடிவு பற்றிய விவரம் தெரியவில்லை.

இந்த ஹன்ட்டா வைரஸ், எலிகளிடமிருந்து, எலிகளின் சிறுநீர் மூலம், பரவக் கூடியது. மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவக் கூடிய வாய்ப்பு மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது.

சிவா ராமசாமி


கொரோனா வைரஸ் உயிரிழப்பு உலகளவில் 18810 ஆனது.. தமிழ் நாட்டிலும் ஒருவர் பலி. கொரோனா வைரஸ் உயிரிழப்பு உலகளவில் 18810 ஆனது.. தமிழ் நாட்டிலும் ஒருவர் பலி. Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.