'அக்பர் பிரதர்ஸ்' நிறுவனம் 100 மில்லியன் பெருமதியான நிவாரணங்களை வழங்கியது.


கொரோனா வைரஸ் ( கொவிட் 19 ) நோயால் பொருளாதார ரீதியில்  பாதிக்கபட்ட அதன் ஊழியர்களுக்கும்
பொதுமக்களுக்கும்   அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் 100 மில்லியன் பெருமதியான நிவாரணங்களை வழங்கி உள்ளது.

 அதேவேளை அதில்   ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களால் தொடங்கப்பட்ட COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு 50 மில்லியன் ரூபா நிதி உதவியும் அளித்துள்ளது.

மேலும்  இலங்கை மக்களுக்கு சேவை செய்வதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில், அந் நிறுவனம் சிலாபத்தில்  புதிய சுகாதார மையத்தை நிர்மாணிப்பதில் தனது ஈடுபாட்டை முன்னெடுத்து வருகிறது.

மேலும் அந்நிறுவனத்தால்  அனைவருக்கும் உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய தேவைகள்  உள்ளிட்ட அவசரகால தேவைகளுக்கும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் தேவை உள்ள பொதுமக்கள்,   தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரிடையே உலர் உணவு  உள்ளிட்ட நிவாரணப் பொதிகள் அவர்களால்  விநியோகிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றுவதற்காக அதன் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின்   ஒத்துழைப்பு குறித்து  நன்றியுணர்வையும் பெருமையையும் தெரிவிப்பதாகவும், இந்த நாட்டின்  குடிமகனாக அதன் கடமைகளை  முழுமையாக உறுதியளித்துள்ளதாகவும் அக்பர் பிரதர்ஸ் இயக்குநர்கள் குழு தெரிவித்துள்ளது.
'அக்பர் பிரதர்ஸ்' நிறுவனம் 100 மில்லியன் பெருமதியான நிவாரணங்களை வழங்கியது. 'அக்பர் பிரதர்ஸ்' நிறுவனம் 100 மில்லியன் பெருமதியான நிவாரணங்களை வழங்கியது. Reviewed by Madawala News on March 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.