எமது ஊருக்கும் விடிவு கிட்டும் இன்ஷா அல்லாஹ்.

இதைவிட சந்தர்ப்பம் இனி ஒரு போதும் வராது நமது ஊரின் தேவைகளை நன்கறிந்தவர் எமது ஊரோடு
அன்பு வைத்தவர் எம்மவர் அதாஉள்ளாஹ்வை நமது  ஊர் மக்களும் மொத்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது. நமது ஊர் மறைந்த தலைவர் அஷ்ரபினால் என்றும் நேசிக்கப்பட்ட ஊர் இருந்தும் அவரின் மரணத்துக்கு பின்னர் கவனிப்பார் அற்று போன ஊர் அதிலும் ஹக்கீமை முழுமையாக நம்பி ஏமாந்த ஊர்.


பல முறை எமது காலடியில் எமது தேவைகளை கேட்டறிய வந்த அதாஉள்ளாஹ்வை விரட்டிய ஊர் என்று பல துன்பங்களை இன்னும் சுமந்து கொண்டிருக்கும் ஊர் இன்ஷா அல்லாஹ் இதிலிருந்து விடிவு பெற வேண்டடியதும் அதற்கான தீர்வினை பெற்றெடுப்பதும் காலத்தின் தேவை அதற்கான கடைசிச் சந்தர்ப்பம் தேசிய காங்கிரஸ் கட்சியோடு எமது ஊர் மக்களும் பயணிப்பதுதான்அதுதான் எமக்கு சாலச்சிறந்ததும்.


பல சர்ச்சைகளுக்குல் சாய்ந்தமருதுக்கே இலகுவாக விடிவு கிடைத்து விட்டது நமக்கு கிடைப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல.

அந்த வகையில் ஊரின் தேவைகளை நன்கு அறிந்த எம்மவர் அதாஉள்ளாஹ்வை ஆதரிப்பதனூடாக இன்ஷா அல்லாஹ் எமது தேவைகளை நாம் வெல்ல முடியும் அதில் பிரதானமானது:

01.ஒலுவில் துறைமுகம்
02.அஸ்ரப் நகர் குப்பை மேடு
03.பொது மைதானம்
ஒலுவில் துறைமுக கடலரிப்பினூடக எமது காணிகள் மீணவர்களின் தொழில் வாய்ப்புகள் என்று பல வகையான பிரச்சனைகளுக்கு இன்னும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அதே போல பல பாகங்களிலும் இருந்து வருகின்ற அனைத்து குப்பைகளயும் கழிவுகளையும் கொண்டு வந்து இங்கு கொட்டப்பட்டு வருகின்றது யானைக்கு தீனியாக அதனால் ஒரு கிராமமே அழிந்து போய்க் கொண்டிருக்கின்றது அந்த அஸ்ரப் நகர் மக்கள் படும் பாடு இறைவன் ஒருவனுக்குத்தான் தெரியும் அந்த மக்களும் இதற்கான தீர்வு கிடைக்கும் என எத்தனை வருடமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தையும் மு.கா தலைவர் மற்றும் அதன் பா.உ ளையும்,உள்ளூர் அரசியல் வாதிகளென எல்லோராலும் நம்பி கைவிடப்படிருக்கிறார்கள் அம் மக்கள்.

 அதிலும் பொது விளையாட்டு மைதானம் என்பது எமது இளைஞர்களுக்கு இது வரைக்கும் எட்டாக்கனியாகவே இருக்கின்றது இந்த நாட்டில் பொது மைதானம் ஒன்று இல்லாத ஊர் என்றால் அதுவும் ஒலுவிலாகத்தான் இருக்க முடியும்.இப்படியான பிரச்சனைகள் வருடகாலமாக எம்மை பாதித்துக் கொண்டிருக்கின்ற விடயங்கள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை நம்பி தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட ஊர் ஒலுவில்.

இத்தப்பிரச்சனையில் இருந்து  நாமும் வெற்றி பெற வேண்டும் எமது தேவைகள் நிறைவேற வேண்டும் என்றால்  நமது ஊரும் தேசிய காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் இது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.  இதற்கு தீர்வு கிடைக்கும் என்றால் அது தேசிய காங்கிரஸ் கட்சியினூடாகவே முடியும் என்ற நம்பிக்கை நம் எல்லோரிடத்திலும் தாேன்றியுள்ளது அல்ஹம்துலில்லாஹ். 

காலா காலமாக நமது ஊர் மக்கள் பிழையான அரசியல் கட்சிகளை ஆதரித்து ஊர்  சாதித்ததை விட எம்மை பயன்படுத்திய அரசியல் வாதிகளே சாதித்திருக்கிறார்கள் என்பதுவே உண்மையும் கூட.

 ஆகவே எமது மக்களும் ஊரின் தேவைகளை அறிந்து இந்த சந்தர்பத்தை பயன்டுத்த வேண்டும் கட்சி ஒன்றும் மார்க்கம் கிடையாது என்ற அடிப்படையில் எமது அயலவர் தூர நோக்குக் சிந்தனை, தூய்மையான எண்ணம் கொண்டவர் தலைவர் அதாஉள்ளாஹ் சேர் அவரின் வெற்றியில் நமது ஊரும் பங்காளர்களாக மாற வேண்டும் அதனூடாக நமது ஊருக்கான விடிவிவையும் பெற்றுக் கொள்ள முடியும் இன்ஸா அல்லாஹ்.

இமாம் MIM
ஒலுவில்
எமது ஊருக்கும் விடிவு கிட்டும் இன்ஷா அல்லாஹ். எமது ஊருக்கும் விடிவு கிட்டும் இன்ஷா அல்லாஹ். Reviewed by nafees on February 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.