ஹஜ் யாத்திரை குறைந்த கட்டணமாக : 5 இலட்சம் ரூபாவுக்கு முகவர்கள் இணங்கவும் - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஹஜ் யாத்திரை குறைந்த கட்டணமாக : 5 இலட்சம் ரூபாவுக்கு முகவர்கள் இணங்கவும்ஹஜ் குழு­வுக்கும் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் நேற்று அலரி மாளி­கையில் நடை­பெற்ற 2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்­பான கலந்­து­ரை­யா­டலில் இறுதித் தீர்­மானம் எட்­டப்­ப­ட­வில்லை.


இந்­நி­லையில் இன்று பிற்­பகல் நான்கு மணிக்கு பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் ஹஜ் குழு மற்றும் ஹஜ் முக­வர் சங்­கங்­களின் பிர­தி­நி­திகள் ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான இறுதிக் கட்ட பேச்­சு­வார்த்தை அலரி மாளி­கையில் நடை­பெ­ற­வுள்­ளது.


இதன்­போது இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை 5 இலட்சம் மற்றும் 6 ½ இலட்சம் ஆகிய இரண்டு ஹஜ் பொதி­களின் (Package) அடிப்­ப­டையில் மேற்­கொள்ள வேண்டும் என்ற இறுதித் தீர்­ மா­னத்தை பிர­தமர் அறி­விக்­க­வுள்ளார்.


குறித்த தீர்­மா­னத்தை ஹஜ் முக­வர்கள் சங்க பிர­தி­நி­தி­க­ளிடம் பிர­தமர் இன்­றைய கூட்­டத்தில் முன்­வைப்பார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


அரசின் குறிப்­பிட்ட ஹஜ் பொதி­க­ளுக்கு ஹஜ் முக­வர்கள் இணக்கம் தெரி­வித்தால் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு முக­வர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­படும். முக­வர்கள் பிர­த­மரின் தீர்­மா­னத்தை ஏற்­றுக்­கொள்­ளாத பட்­சத்தில் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­டு­மென ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பழீல் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.


இந்­நி­லையில் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் அர­சாங்­கத்தின் மூலமே மேற்­கொள்­ளப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.


இதே­வேளை ஹஜ் முக­வர்­களின் சங்கம் தங்­க­ளது ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான செயற்­றிட்­டத்தை நேற்று முன்­தினம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் கையளிப்பதாக தெரிவித்திருந்தாலும் அத்திட்டம் நேற்று முன்தினம் கையளிக்கப் படவில்லை எனவும் ஹஜ் குழு தெரிவித்தது.-Vidivelli


ஏ.ஆர்.ஏ. பரீல்

ஹஜ் யாத்திரை குறைந்த கட்டணமாக : 5 இலட்சம் ரூபாவுக்கு முகவர்கள் இணங்கவும் ஹஜ் யாத்திரை குறைந்த கட்டணமாக : 5 இலட்சம் ரூபாவுக்கு முகவர்கள் இணங்கவும் Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5