இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லுாரி மாணவனை குணப்படுத்த உதவி வழங்குவோம்! - Madawala News Number 1 Tamil website from Srilanka

இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லுாரி மாணவனை குணப்படுத்த உதவி வழங்குவோம்!
களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் எம்.எம். அஹமத் அபாஸ் இரத்தப் புற்று நோயால் பீடிக்கப்பட்டு இந்தியா, வேலூர் சிஎம்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அஹமத் அபாஸ் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்ற கனவில் கஷ்டப்பட்டு கல்வி கற்று உயர்தரப் பரீட்சையில் மூன்று ஏ சித்திகளைப்பெற்று களனி பல்கலைக்கழக வடகொழும்பு மருத்துவ பீடத்திற்கு தொிவானார்.

கடந்த வருட இறுதியில் அஹமத் அபாஸ் லியுகேமியா Leukemia என்ற இரத்தப் புற்றுநோயால் பீடிக்கபட்டு இருப்பது தொிய வந்தது. மகரகம அபேக்ஷா மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சைகளை நிறைவு செய்துக்கொண்டு தற்போது இவர் மேலதிக சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை குணப்படுத்துவதற்கு அவசரமாக “என்புமச்சை மாற்று சிகிச்சை” (Bone Marrow Transplant) அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருக்கின்றனர்.

இதற்கான மருத்துவ செலவாக 25 இலட்சம் இந்திய ரூபாய்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. (இலங்கை ரூபாய் மதிப்பின் படி சுமார் 62,50,000 ரூபாய்) இதற்கான உதவியை ஆசிரியராக கடமை புரியும் வாழைச்சேனையை சேர்ந்த அபாஸின் தந்தை எம்.யூ.எம். மொஹிதீன் நல்லுள்ளம் படைத்த உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

உங்களால் இயன்ற உதவியை வழங்கி இந்த மருத்துவ மாணவனை குணப்படுத்தும் பணிக்கு உதவுமாறும் அவர் வேண்டுகிறார்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். இந்த தகவலை ஒரு செய்தியாக வாசித்து விட்டு கடந்து செல்லாமல் குறைந்தது ஒரு சிறிய தொகையையாவது இவருக்காக அவரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுங்கள். (உங்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி உங்கள் பண உதவியை உங்களால் வழங்கக் கூடிய வசதிகள் தற்போது இருக்கின்றன) நீங்கள் உதவி செய்வதோடு நின்று விடாமல் மற்றவர்களுக்கும் இந்த தகவலை அறியச்செய்யுங்கள்.

Bank A/C No M.U.M. Mohideen

A/C No: 102200120007624 Peoples Bank, Valaichenai, Sri Lanka. தொடர்புகளுக்கு:-

Mob+918940983176,

email: ahamedafas7826656@gmail.com

Whatsap: 0777033217 M.U.M. Mohideen
இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லுாரி மாணவனை குணப்படுத்த உதவி வழங்குவோம்! இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லுாரி மாணவனை குணப்படுத்த உதவி வழங்குவோம்! Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5