எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி போட்டியிடவுள்ளோம் : அசாத் சாலி - Madawala News Number 1 Tamil website from Srilanka

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி போட்டியிடவுள்ளோம் : அசாத் சாலிஎதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி போட்டியிடவுள்ளதாக அதன்
தலைவர், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை நம்பி செயற்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான கட்சிகள் இரண்டும் தமது ஆட்சிக்காலத்தில் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாது அவர்களை ஏமாற்றியுள்ளதாக அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய கூட்டமைப்பில் இதய சின்னத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவற்கு சஜித் பிரேமதாசவிற்கு அனுமதி வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனது நிலைப்பாட்டினை மாற்றி சஜித் பிரேமதாச யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருவதாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்டின் தோலைப் போர்த்திய ஓநாயாக செயற்படுகின்ற ரணில் விக்ரமசிங்கவை இனியும் நம்பக்கூடாது என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகளின் ஒத்துழைப்புடன் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என அசாத் சாலி தனது அறிக்கையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி போட்டியிடவுள்ளோம் : அசாத் சாலி எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி போட்டியிடவுள்ளோம் : அசாத் சாலி Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5