சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தும் நிகழ்வு. (படங்கள் ) - Madawala News Number 1 Tamil website from Srilanka

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தும் நிகழ்வு. (படங்கள் )


  பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை
தரமுயர்த்தப்பட்ட உத்தியோகபுர்வ கடிதத்தினை கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்லார் தலைமையில் சனிக்கிழமை(15) இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியின் பயனாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பீ ( ” B ” ) தரத்திலிருந்து ஏ ( ” A " ) தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் .ஜீ.சுகுணன் ஆகியோர் பிரதம அதிதிகவும் ,பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பணிப்பாளர் டொக்டர் .எம்.சீ.எம்.மாஹீர் , பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப் , சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா , அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோஸ்தர் எம்.சாபி, மாவட்ட மார்பு நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் சனூஸ் காரியப்பர், மலேரியா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.நௌஸாத், அபிவிருத்தி சபை பிரதி தலைவர் எம்.எம்.முபாறக், செயலாளர் எம்.ஐ.எம்.சதாத், வைத்தியசாலை வைத்தியர்கள் டொக்டர் எம்.ஏ.ஸி.எம்.அமீன், டொக்டர் எம்.வகாப், வைத்தியசாலை தாதி உத்தியோஸ்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டர்.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தும் நிகழ்வு. (படங்கள் ) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தும் நிகழ்வு. (படங்கள் ) Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5