கொரோனாவை தடுக்கும் நான்கு வாய்ப்புக்களை தவறவிட்ட சீனா...


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
கொரோனா வைரஸ் பற்றியும், அதனை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியகூறுகள் குறித்தும்
சர்வதேச அமைப்புகள் சீனாவிடம் 4 முறை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் December மாதம் 8ம் திகதி கொரோனா வைரஸ் உருவெடுத்ததாக சீன வைத்தியர்களே, December 12ம் திகதி உறுதிப்படுத்தியிருக்கின்றனர். நோயாளி ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான காய்ச்சலை அறிகுறியாக கொண்டு இதனை சீன வைத்தியர்கள் கணித்துள்ளனர்.

ஆனால், மிகவும் கவனமாகவிருந்த சீன சுகாதாரத்துறை, மற்றும் அதன் வைத்திய ஆராய்ச்சியாளர்கள் December மாதம் 26ம் திகதி தான், அது சார்ஸ் போன்றதொரு வைரஸ் என ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து, December மாத இறுதியில், அது "கொரானோ வைரஸ்" என உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியது. January மாதம் 3ம் திகதி, கொரோனா, ஒரு மனிதரிடமிருந்து, மற்றொரு மனிதருக்கு பரவும் என சர்வதேச விஞ்ஞான அமைப்புகள் எடுத்துக் கூறியது.

January மாதம் 20ம் திகதிதான், அந்த நோய்த் தொற்று, "கொரோனா வைரஸ்" என சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டது.

சீனாவின் புதுவருடத்தையொட்டி, January மாதம் 18ம் திகதி, 40 ஆயிரம் பேருக்கு, வுஹான் நகர நிர்வாகம் விருந்து வழங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வுஹான் நகர மேயரிடம் கேள்வி எழுப்பியபோது மனிதரிடமிருந்து, மனிதருக்கு பரவும் என்பது பற்றி பின்னரே தெரியவந்ததாகக் கூறினார். அப்போதுகூட தாங்கள் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதை ஒப்புக் கொள்ளவில்லை.

சொந்த நாட்டு மக்களின் தொடர் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்ட சீன அரசாங்கம், தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டு தாக்கத்தை மூடி மறைப்பதிலேயே குறியாக இருந்ததாக குற்றச்சாட்டு சீன அரசாங்கத்தின் மேல் இருக்கிறது.

கொரோனாவை தடுக்கும் நான்கு வாய்ப்புக்களை தவறவிட்ட சீனா... கொரோனாவை தடுக்கும் நான்கு வாய்ப்புக்களை தவறவிட்ட சீனா... Reviewed by Madawala News on February 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.