நம்பினார் கைவிடப்படார் , ராஜபக்ச தீர்வுகள் - Madawala News Number 1 Tamil website from Srilanka

நம்பினார் கைவிடப்படார் , ராஜபக்ச தீர்வுகள்


ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ, மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களும் 
,அவரகளது அரசும், இந்நாட்டில் நிலவி வந்த பல  பிரச்சினை களுக்கான தீர்வுகளை முன்வைக்கவே துணிந்து வந்து செயற்படுகின்றனர், அதனை முஸ்லிம்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்பது பற்றிய பதிவே இது

#சாய்ந்தமருதுக்கான_தீர்வு

சாய்ந்த மருதுப் பிரச்சினை கல்முனையை  பிரதிநிதிப்படுத்தும் அரசியல்வாதிகளின் தீர்க்கதரிசனமற்ற பார்வையினாலும், சோம்பறித்தனமான நடத்தையினாலும் உருவாக்கப்பட்ட ஒன்றே ஆகும், அதனை கிழக்கிற்கு வெளியே இருந்து வந்த தலைவர்கள் தமது தேர்தல்கால உண்டியலாகப் பயன்படுத்தினர், ஆனால்  ராஜபக்‌ஷக்கள் வழங்கிய உறுதி மொழியின்படி பொதுத்தேர்தலுக்கு முன் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்பட்டிருக்கின்றது, இதில் சாய்ந்மருது மக்களின் ஒற்றைமையும், உரிமை உணர்வும் பாராட்டத்தக்கது,

#அதாவுள்ளாவின்_பாத்திரம்,

அதாவுள்ளா அவர்கள் நீண்ட காலமாக கொள்கை அரசியலுக்காகவும், கிழக்கின் உணர்வை வெளிப்படுத்தும் பாணியிலும், தனது அரசியலை வடிவமைத்துள்ளார், அரசியலில் ராஜபக்‌ஷ அணியினரை எவ்வாறு விசுவாசமாகப் பயன்படுத்த முடியும் என்ற நுட்பத்தை அறிந்தவர்,அதனால் வட கிழக்குப்  பிரிப்பு உட்பட  பல வெற்றிகளில் பங்கு கொண்டவர்   இந்த வெற்றியிலும் அவரது பங்கு அதிகம்,

#கல்முனைப்_பிரச்சினை, 

மாநகரத்தில் இருந்து ஒரு பகுதி பிரிந்து செல்வது என்பது ஆரோக்கியமான தல்ல அது வாக்குகளைக் குறைக்கும்  ,  2022 ல் தான் புதிய  சாய்ந்தமருது நகரசபை செயற்படத் தொடங்கும் எனினும் 2022 வரையான காலப்பகுதிக்கு இடையில் கல்முனை மாநகருக்கு உட்பட்ட முஸ்லிம்  வாக்காளர்கள்   தமக்கான நிலையான தீர்வுக்கான சிறந்த வழிமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டும், அதற்காக ஆளும் அரசுடன் நெருக்கமான உறவினைக் கொண்டிருக்கும் தலைவர்களின் ஊடாக அதை மேற்கொள்ளுவது இன்னும் ஆரோக்கியமானது கல்முனைப் பிரதேச உள்ளூர் அரசியல்வாதிகளும், ஆர்வமிக்க அனைவரும் இன்னும் அதிகமாகச் செயற்பட வேண்டி இருக்கும்,

#நடந்தவற்றின்_படிப்பினைகள்

 1). ராஜபக்‌ஷக்கள் தம்மை நம்பியவர்களை கை விட மாட்டார்கள், விசுவாச அரசியல் அவர்களுடம் அதிக விலை உயர்ந்தது,அந்த இடத்தை  இன்று  அவர்கள் கிழக்கில் அதாவுள்ளா அவர்களுக்கு  வழங்கி உள்ளனர் 

2)ஒரு ஊர் தமக்கான கோரிக்கையை முன்வைத்து  போராடினால் ,தேசிய அரசியல் நகர்வுகளை கவனத்திற் கொண்டு வழி நடந்தால், அரசியல்வாதிகளை  மட்டும் நம்புவதை விட பொது மக்கள் விழிப்பாக இருந்தால்  வெற்றி அடையலாம் என்பதை சாய்ந்தமருது உண்மைப் படுத்தி இருக்கின்றது, 

2). தமது அரசியல் தலைவர்கள் கூறுவதை மட்டும் நம்பி, அவர்கள் கூறுகின்ற வழியில் சென்றதும், உரிமைக் கோசம் என்ற வகையில் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகிச் சென்றதும் கல்முனைக்கான  இன்றைய பின்னடைவாகும், 

ஆனாலும் இனியாவது  தமது பலவீனமான அரசியல்வாதிகளை புறமொதுக்கி விட்டு, கல்முனைக்கான கொள்கை அரசியலில்   சரியான பாதையை சமூக ஆர்வமிக்கவர்கள் சிந்திதசெயற்படுவார்களாயின் கல்முனைக்கான எதிர்கால சேதாரங்களில் இருந்து , பாதுகாக்க முடியும், 

முபிஸால் அபூபக்கர் 
கல்முனை.
நம்பினார் கைவிடப்படார் , ராஜபக்ச தீர்வுகள் நம்பினார் கைவிடப்படார் , ராஜபக்ச தீர்வுகள் Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5