இன்று அரசாங்கத்திற்கு எதிராக விரலை நீட்டுவதற்கு எதிர்க்கட்சிக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை.


இன்று நாட்டில் வலுவான எதிர்க் கட்சி இல்லாத நிலையில் ரணில் அணி மற்றும் சஜித் அணி என்று
2 குழுக்களாகப் பிரிந்து உள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.


இன்று அரசாங்கத்திற்கு எதிராக விரலை நீட்டுவதற்கு எதிர்க்கட்சிக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.


தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் கடந்த அரசாங்கத்தின் போது எந்தவித நிர்வாகமும் இன்றி செயற்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து நாட்டை மீட்டதால் நாம்  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தைவிட மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.


ஜனாதிபதி அவர்கள் இன்று நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கி இருக்கிறார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதியின் திட்டத்தைப் பாராட்டி அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.


உள்ளுர் ஓட்டுத் தொழிலாளர்களுடன் சிற்ப்புக் கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்;. இந்தக் கலந்துரையாடல் (11) புத்தளம் மாவட்டத்தில் வயிக்கால, ரிவோரிச் ஹோட்டலில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலை அனைத்து இலங்கை களிமண் கூரை ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் புத்தளம் மாவட்டம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ள10ர் ஓட்டுத் தொழில் உரிமையாளர்களும் பங்கேற்றனர்.


அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் 'நாட்டில் வீடில்லாத மக்களுக்கு வீடமைச்சு மூலம் வீடு வழங்குவதே எங்கள் நோக்கமாகும். இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் வீடுகளைக் கட்டும் அமைச்சை வழிநடாத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் வகுக்கப்படும் போது எங்கள் முதலாவது திட்டமாக ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு 'கிராமத்திற்கொரு வீடு' வழங்கும் திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கிராம நிலதாரி பிரிவிற்கும் ஒரு வீடாக 14,022 வீட்டு அலகுகள் நாடு முழுவதும் கட்டப்படும். 


பிரதமரினால் அமைச்சின் அங்கிகாரத்தைப் பெற்ற பின்னர் இத்திட்டத்தின் ஆலோசனைக்காக பிரதமரைச் சந்தித்தேன். 'பிரதமரே! வட, கிழக்கு மாகாணத்திலுள்ள வீடுகளுக்கு கூரை ஓடு போட வேண்டும். ஆனால் செலவு கொஞ்சம் கூட என்றும் கூறினேன. அதற்கு பிரதமர் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, அனைத்து வீடுகளுக்கும் கூரை ஓடு போடுங்கள்' என்றார். பிரதமருக்கு தொழிற்சாலை குறித்து நல்ல அறிவு உள்ளது. இதன் விளைவாக உள்ள10ர் ஓட்டுத் தொழிற்சாலைக்கு வீடுகளுக்கு கூரை ஓடு போடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இன்று நம்மிடம் இருப்பது நல்ல பார்வையும் பலமும் கொண்ட அரசாங்கமாகும். கடந்த அரசாங்கத்தில் நாங்கள் இதனைக் காணவில்லை. ஓட்டுத் தொழில் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முன்னாள் வீடமைப்பு அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். அரசாங்க வீட்டுத் திட்டத்திற்காக உள்ள10ர் ஓடு உரிமையாளர்களிடமிருந்து ஓடுகளைப் பெறுவதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர் கூறியது, எங்களுக்கு கூரை ஓடு போடுவதைவிட  அஸ்பெஸ்டஸ் கூரை போடுவது சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பானது என்று அவர் கூறினார். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருக்கு இவ்வாறான கருத்துக்கள்தான் உள்ளது. நிர்வாகம் இல்லாத ஒரு தலைவர் அவர். அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கு மிகப் பெரிய சவாலாக அமைவது எதிர்க்கட்சியே. கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எதிர்க் கட்சிகளாக  நாட்டின் பிரச்சினைகளுடன் நாங்கள் போராடினோம். அப்போது போராட எங்களுக்குக் காரணங்கள் இருந்தன. ஆனால் இன்று எதிர்க்கட்சிக்கு 2 அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. அது ரணில் அணி மற்றும் சஜித் அணியாகும். இன்று சிறிகோத்தாவில் போராடுவதைத் தவிர நாட்டின் வேலைத் திட்டத்திற்கான திட்டங்களை முன் வைக்க எதிர்க்கட்சி தவறிவிட்டது. இந்த அரசாங்கத்தின் மீது விரல் நீட்ட இன்று எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.


ஜனாதிபதி அவர்கள் இன்று ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளார். ஒரு சுவரில் போஸ்ட்டர் ஒட்டுவதை விட இளைஞர்கள் ஓவியம் வரைந்து நாட்டை அலங்கரிக்கின்றனர். பயிரிடப்படாத நிலையில் உள்ள நெல் வயல்களை இன்று இளைஞர்கள் பயிரிடத் தொடங்கியுள்ளனர். ஜனாதிபதியின்  வாகனங்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததன் மூலம் நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

இதனால் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மிகவும் எளிய முறையில் நடைபெற்றது. கடந்த அரசாங்கம் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது இளைஞர்களின் மடிக்கணினி திரையிடலை நடாத்தியது. இதற்காக பல மடிக்கணினிகள் தனியாக வாங்கப்பட்டது.


அதுதான் கடந்த அரசாங்கத்தினால் வீணாக்கப்பட்டதாகும். தங்கள் உருவத்தை உயர்த்துவதற்காக 2015 க்கு முன்னர் அரசாங்கத்தால் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள் இரு மடங்கையும் தாண்டி அவர்களின் உருவத்தை மூன்று மடங்காக உயர்த்தினர். திரு. மஹிந்த அவர்கள் அப்பச்சி என்றே அழைக்கப்பட்டார். ஆனால் 2005 க்கு முன்னர் 80 களில் ஜனாதிபதியை மாண்புமிகு என்றே அழைத்தார்கள்.


அன்று பதாகை ஒன்றைத் திறக்கும் போது மாண்புமிகு ரணசிங்க பிரேமதாச  என்றே  குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று நாட்டுக்குத் தேவையான ஒரு அரசியல் கலாச்சாரம் உருவாகியுள்ளது. இன்று பலர் ஜனாதிபதியைப் பாராட்டுகிறார்கள். சஜித் பிரேமதாச கூறுகிறார் ஜனாதிபதியின் கீழ் தான் பிரதமராக முடியும் என்று. சஜித் தேர்தல் காலத்தில் என்ன சொன்னாலும் ஜனாதிபதியின் திட்டம் நல்லது என்று அறிக்கை விடுத்துள்ளார். அரசு வீடமைப்புத் திட்டத்திற்கு உயர்தர ஓடுகளை வழங்குவதன் மூலம் ஒட்டு உரிமையாளர்களாக உங்களை ஆக்கிக் கொண்டு எங்களை ஆதரிக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.


ஓரு வீட்டுக்கு சுமார் 1200 ஓடுகள் தேவைப்படுகின்றது. 14,022 வீடுகளுக்கும் ஒரே அளவு தேவைப்படுகிறது. அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் போது உள்ள10ர் உரிமையாளர்களுக்கு சலுகை முறையில் வட்டி வீதக் கடனை வழங்குமாறு ஜனாதிபதியிடம் நான் மும்மொழிகிறேன்' என்றும் தெரிவித்தார்
உள்ள10ர் ஓட்டு தொழில் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது.


ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் இது பற்றி கலந்துரையாடி விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் அனைத்து இலங்கை களிமண் கூரை ஓடு உற்பத்திளர்கள் சங்கத்தின் தலைவர் பாப்டிஸ் பெர்ணான்டோ, அதன் அதிகாரிகள் மற்றும் உள்ள10ர் அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஊடகப் பிரிவு
2020.02.13

இன்று அரசாங்கத்திற்கு எதிராக விரலை நீட்டுவதற்கு எதிர்க்கட்சிக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை. இன்று அரசாங்கத்திற்கு எதிராக விரலை நீட்டுவதற்கு எதிர்க்கட்சிக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை. Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.