அமெரிக்கா, இஸ்ரேல் சிறிய தவறை செய்தாலும் அதன் மீது தாக்குதல் நடத்துவோம் : ஈரான் - Madawala News Number 1 Tamil website from Srilanka

அமெரிக்கா, இஸ்ரேல் சிறிய தவறை செய்தாலும் அதன் மீது தாக்குதல் நடத்துவோம் : ஈரான்


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில்,
கடந்த மாதம் 3ம் திகதி ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடியாக ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.  இவ் மோதலால் இருநாடுகளுக்கு இடையே யுத்தம் மூழும், அபாயம் உருவானது. எனினும் தற்போது இருநாடுகளுக்குமிடையிலான பதற்றம் சற்று தணிந்துள்ளது.

இந்த நிலையில், சிறிய தவறு செய்தாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதன் 40ம் நாள் நினைவு நிகழ்ச்சி, ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஈரான் புரட்சிகர படையின் தளபதி ஹூசைன் சலாமி,
அங்கு கூறுகையில்:-
https://www.timesofisrael.com/iran-guards-commander-threatens-to-hit-israel-us-if-slightest-error-made/

‘‘அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படும் இஸ்ரேல், சிரியாவில் ஈரானின் செல்வாக்கை சரிய வைக்க அமெரிக்காவிடம் ஒப்புக் கொண்டுள்ளது. நீங்கள் (அமெரிக்கா, இஸ்ரேல்) ஒரு சிறிய தவறை செய்தாலும். நாங்கள் உங்களை தாக்குவோம்’’ என்றார்.

மேலும் இஸ்ரேல் அமெரிக்காவை நம்ப வேண்டாமென்றும்,  இஸ்ரேலால் ஆக வேண்டிய வேலைகள் முடிந்ததும் அமெரிக்கா அந்த நாட்டை தரையோடு தரையாக நசுக்கி விடும் என்று  கூறினார்.

அமெரிக்கா, இஸ்ரேல் சிறிய தவறை செய்தாலும் அதன் மீது தாக்குதல் நடத்துவோம் : ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் சிறிய தவறை செய்தாலும் அதன் மீது தாக்குதல் நடத்துவோம் : ஈரான் Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5