இஸ்மத் பாத்திமாவின் "புதையல் தேடி" கவிதை நூல் வெளியீட்டு விழா. அனைவருக்கும் அழைப்பு.


கல் - எளிய மே.மா/ மினு/ அலிகார் மஹா வித்தியாலயத்தின் பிரதி அதிபரான  பஸ்யாலயைச் சேர்ந்த எஸ்.ஏ.இஸ்மத்
பாத்திமா (இலங்கை அதிபர் சேவை -தரம் 2) எழுதிய "புதையல் தேடி" கவிதை நூல் வெளியீட்டு  விழா தர்கா நகர் ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளரும் கல் எளிய, அலிகார் மஹா வித்தியாலயம் முன்னாள் அதிபரும் நூலாசிரியரின் அன்புத் கணவருமான எம்.ஏ.எம்.ரிப்தி தலைமையில் கல்- எளிய மே.மா/மினு/ அலிகார் மஹா வித்தியாலயம் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் (16) ஞாயிற்றுக்கிழமை  மு.ப. 10.00 மணி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.


இந்நிகழ்வு இலக்கிய புரவலர் ஹாஷிம் உமர் முன்னிலையில் நடைபெற உள்ளதோடு, முதற்பிரதியையும் பெற்றுக் கொள்வார்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சமாதான நீதிவானும் ஓய்வு பெற்ற அதிபரும் நூலாசிரியரின் தந்தையுமான ஏ.சி.செய்யது அஹமது கலந்து சிறப்பிக்க உள்ளார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக, கிண்ணியா முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கலாபூஷணம் இலக்கிய வித்தகர் பி.ரீ.அஸீஸ், நவமணி செய்தி ஆசிரியர் எம்.எஸ்.எம்.ஸாஜஹான்,  இலங்கை WAMY  நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நஜ்மான் ஸாஹித் கிண்ணியாவைச் சேர்ந்த சட்டத்தரணி கலாபூஷணம் ஏ.சி.எம்.இப்றாஹீம்,  அல் முஹ்ஸின் பவுண்டேசன் ஸ்தாபகரும்  பிரபல தொழிலதிபர் சமூக ஆர்வலருமான  எம்.எம்.இஸ்மாயில் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.எம்.ஸாபிர் களனி/கம்பஹா வலயம்  உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்மொழி மூலம்) அஷ்ஷெய்க் எம்.ரீ.எம் தௌஸீர்  ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

2017 இல் ‘இரண்டும் ஒன்று’ கவிதை நூலினை தந்த இவர், இரண்டாவது கவிதை நூலாக ‘புதையல் தேடி’ நூலினை தந்து இலக்கியத்திற்கு வளம் சேர்க்கிறார்.

மேலும் அனைவரையும் இந்நிகழ்விற்கு எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா அன்புடன் அழைக்கின்றார்.
இஸ்மத் பாத்திமாவின் "புதையல் தேடி" கவிதை நூல் வெளியீட்டு விழா. அனைவருக்கும் அழைப்பு.  இஸ்மத் பாத்திமாவின் "புதையல் தேடி" கவிதை நூல் வெளியீட்டு விழா.  அனைவருக்கும் அழைப்பு. Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.