சீனாவில் மீண்டும் சில அப்பிள் ஸ்டோர்கள் திறக்க ஆரம்பித்துள்ள ஆப்பிள் நிறுவனம்.


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்காலிகமாக மூடப்பட்ட அப்பிள் ஸ்டோர்களில்
சிலவற்றை அப்பிள் நிறுவனம் மீண்டும் திறந்துள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலையை  பிரகடனப்படுத்தியுமுள்ளது.


இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸூக்கு 1,526 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதை தொடர்ந்து சீனாவிலிருந்த தனது அப்பிள் ஸ்டோர்களை அப்பிள் நிறுவனம் தற்காலிகமாக மூடியது. இந்நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில் 5 அப்பிள் ஸ்டோர்களை அப்பிள் நிறுவனம் நேற்று மீண்டும் திறந்துள்ளது. அங்கு காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த கடைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அப்பிள் ஸ்டோர் கடைகள் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மீண்டும் சில அப்பிள் ஸ்டோர்கள் திறக்க ஆரம்பித்துள்ள ஆப்பிள் நிறுவனம். சீனாவில் மீண்டும் சில அப்பிள் ஸ்டோர்கள்  திறக்க ஆரம்பித்துள்ள ஆப்பிள் நிறுவனம். Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5