சஜித் இதயத்தினை சின்னமாக தேர்ந்தெடுத்தது காதலர் தினம் கொண்டாடவா ? - Madawala News Number 1 Tamil website from Srilanka

சஜித் இதயத்தினை சின்னமாக தேர்ந்தெடுத்தது காதலர் தினம் கொண்டாடவா ?சஜித் பிரேமதாச தனது கூட்டணிக்கு இதயத்தினை சின்னமாக தேர்ந்தெடுத்தது காதலர் தினம் கொண்டாடவா ? என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக கேள்வி எழுப்பியுள்ளார்.


எல்லோருக்கும் தலைவராக முடியாது எனவும் அதற்கு தலையெழுத்து சரியாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் அல்லாமல் வேறு எந்த சின்னத்திலும் 
போட்டியிட தாம் தயாராக இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது ,

யானை சின்னத்தில் வரும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதே கட்சியில் உள்ள அனைவரினதும் விருப்பம். தேவையானால் கட்சிக்குள் வாக்கெடுப்பை நடத்தலாம்.

அதைவிடுத்து இதய சின்னத்திலோ அல்லது வேறு எந்த சின்னத்திலோ போட்டியிட்டால் கடந்த தேர்தலை விட படுதோல்வியை சந்தித்து இருப்பதையும் இல்லாமலாக்கிக் கொள்ள வேண்டி வரலாம்.என்னைப் பொறுத்தவரை யானை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திலும் நான் போட்டியிட மாட்டேன் என்றார் நவீன். 

சஜித் இதயத்தினை சின்னமாக தேர்ந்தெடுத்தது காதலர் தினம் கொண்டாடவா ? சஜித் இதயத்தினை சின்னமாக தேர்ந்தெடுத்தது காதலர் தினம் கொண்டாடவா ? Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5