தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த விஸ்வநாதன் நிவேதாவுக்கு வாழ்த்துக்கள். - Madawala News Number 1 Tamil website from Srilanka

தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த விஸ்வநாதன் நிவேதாவுக்கு வாழ்த்துக்கள்.


( அஸ்ஹர் இப்றாஹிம்)
இந்து கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கல்வியமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த  அகில இலங்கைப்
பாடசாலைகளுக்கிடையிலான அறநெறி பேச்சுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட   பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் தரம் 10 இல் கல்வி பயிலும் விஸ்வநாதன் நிவேதா தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.


இரத்மலான இந்துக்கல்லூரியில் கடந்த வாரம் இடம்பெற்ற மேற்படி போட்டியில் தேசிய ரீதியில் அதிகளவிலான மாணவ மாணவிகள் இப் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.


இந்து சமய அறநெறிப் பாடசாலைகளின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் இந்த மாணவி தனது  பேச்சுத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
இம்மாணவிக்கு பாடசாலை அதிபர் , பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்தி சபை , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் பாடசாலை கல்வி சமூகம் மற்றும் நலன் விரும்பிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த விஸ்வநாதன் நிவேதாவுக்கு வாழ்த்துக்கள். தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த விஸ்வநாதன் நிவேதாவுக்கு வாழ்த்துக்கள். Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5