பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கெளரவிப்பு.


(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அல் -பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்க்கு(2019) தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை
கெளரவிப்பு நிகழ்வு பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 
நேற்று(14) பிற்பகல் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.


இதன் போது பாடசாலை முன்றலில் உள்ள வீதியினால் அதிதிகளும் 
கெளரவம் பெரும் மாணவர்களும் அழைத்து வரப்பட்டனர். இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ் .அப்துல் ஜலீல் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.நபார் அவர்களும் மற்றும் விசேட அதிதியாக பிரதி அதிபர்களான
எம்.எஸ்.அலிகான் ,எம்.ஏ.அஸ்தார் ஆகியோரும் முன்னாள் அதிபர்கள் கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் உள்ள பாடசாலையின் அதிபர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் பெற்றோர்கள்
நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வின் அங்கமாக பல்கலைகழகம் மற்றும் கல்வியியல் கல்லூரிக்கு தெரிவான மாணவர்களுக்கு நினைவு சின்னம் பதக்கம் அணிவிப்பு ,சான்றிதழ் என்பன வழங்கப்பட்டதுடன் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


மேலும் அண்மையில் தேசிய ரீதியாக இடம்பெற்ற சிறுவர்களுக்கான தேசிய மெய் வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மூன்றாம் இடம்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களும் இவர்களை பயிற்றுவித்த விளையாட்டு பயிற்றுவிப்ப்பாளர் ,ஆசிரியகளும் கிண்ணம் பதக்கம் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர் .இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

M.N.M.Afras
பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கெளரவிப்பு. பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கெளரவிப்பு. Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.