சாய்ந்தமருது மக்கள் வெற்றிக்களிப்பில் ...


( அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கி வந்த சாய்ந்தமருது பிரதேசம்  தனியான நகரசபையாக
பிரகடனப்படுத்தப்பட்ட அதி விசேட வர்த்தமானி கடந்த வெள்ளிக்கிழைமை நள்ளிரவு  அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது மக்கள் வெற்றிக்களிப்பில் பட்டாசு கொழுத்தி  , பிரதான வீதியில் சென்றோருக்கு இனிப்பு வழங்கி தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.


சாய்ந்தமருது  - கல்முனை பிரதான வீதி ஓரிரு மணித்தியாலயங்கள் மக்களால் நிரம்பிக் காணப்பட்டதால் வீதிப் போக்குவரத்தும் சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது. கல்முனை  வீதிப்போக்குவரத்துபொலிஸார் வீதியை சீராக்குவதிலும் போக்குவரத்தினை விரைவுபடுத்துவதிலும் ஈடுபட்டிருந்தனர்.
 சாய்ந்தமருது நகர சபை 2022 பங்குனி மாதம்  20 ஆம் திகதி அமுலாகும் வகையில் 21 62 / 50  இலக்கம்   கொண்ட அதி விசேட வர்த்தமானி வெள்ளிக்கிழமை நள்ளிரவு  பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்களின கையொப்பத்துடன் வெளியாகியிருந்தது.
1987 ஆம் ஆண்டு கல்முனைத் தொகுதியில் நான்கு உள்ளுராட்சி சபைகள் இயங்கி வந்த நிலையில் அதனை முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ரணசிங்க பிரேமதாச ஒன்றிணைத்து கல்முனை பிரதேச சபைக்குள் உள்வாங்கியிருந்தார்.பின்னர் அது கல்முனை மாநகரசபையாக மாற்றப்பட்டது.


முன்பிருந்த உள்ளுராட்சி சபையை மீண்டும் நகரசபையாக தங்களுக்கு பெற்றுத் தருமாறு சாய்ந்தமருது  மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர் அத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேச்சைக் குழுவாக சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைமையின் கல்முனை  மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிட்டு  பிரலம் பெற்ற அரசியல் கட்சிகளை தோற்கடித்து அதில் 6 உறுப்பினர்களை வெண்று  மொத்தம் ஒன்பது உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும்


 கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் கட்சியின் தலைமைகள் , முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்ரமசங்க போன்றோர் தேர்தல் காலங்களில்   சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து தொடர்ச்சியாக இந்த மக்களை ஏமாற்றயும் வந்தனர்.


கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சாய்ந்தமருதிற்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக வருகை தந்திருந்த தற்போதய பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பஸீல் ராஜபக்ஸ ஆகியோர் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபையை பெற்றுத் தருவதாக அளித்திருந்த வாக்குறுதிக் கமைய இது இடம்பெற்றுள்ளது.


சாய்ந்தமருது ஜும்ஆப் பளளிவாசல் நம்பிக்கையாளர் சபை  மற்றும் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் வழிகாட்டலில் அண்மையில் கொழும்பில் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தனர். பிரதம மந்திரி உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இவ்விடயத்தை உடனடியாக அமுல்படுத்துர்மாறு
உத்தரவு பிறப்பித்திருந்தார்.
சாய்ந்தமருது மக்கள் வெற்றிக்களிப்பில் ...  சாய்ந்தமருது மக்கள் வெற்றிக்களிப்பில் ... Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.