காட்டு யானைகள் தொல்லையால் சேதங்கள் விளைவிப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

காட்டு யானைகள் தொல்லையால் சேதங்கள் விளைவிப்பு.


-ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட
முத்து நகர் பகுதியில் காட்டு யானைகள் தங்களது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து இரவு வேலைகளில் பயிர் நிலங்களை துவம்சம் செய்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

தென்னை,கத்தரி,வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர் நிலங்கள் இக் காட்டு யானைகளினால் சேதமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

உரிய பகுதியில் யானை வேலி அமைக்கப்பட்டிருந்தும் கூட அது தரமற்றதாக உள்ளதாகவும் இதனை உடைத்தெறிந்து விட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவதாகவும் இதனால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அன்றாடம் பயிர் நிலங்கள் மூலம் அதனை நம்பி உழைத்து வாழும் எமக்கு இவ்வாறான நிலைமை ஏற்படுதல் பெரும் கவலையளிப்பதாகவும் பிரதேசவாசிகள் அங்கலாய்க்கின்றனர்.

குறித்த பிரதேசத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கும் அதேவேலை திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படும் குறித்த கிராமமானது இவ் வீதியூடாக இரவு நேரங்களில் வீதி விளக்குகள் இன்மை காரணமாக இரவு நேரங்களில் பயணம் செய்தல் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.

உரிய காட்டு யானைக்கான பிரச்சினை உள்ளிட்ட சக பிரச்சினைகளுக்கும் உரிய அதிகாரிகள் தீர்வினை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
காட்டு யானைகள் தொல்லையால் சேதங்கள் விளைவிப்பு. காட்டு யானைகள்  தொல்லையால் சேதங்கள் விளைவிப்பு. Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5