அரச ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்திற்கு ஏற்ப மாதாந்தம் செலுத்தக் கூடிய வகையில் வீடுகள்...


மொரட்டுவை,  லுணாவ நகர தொடர் மாடி வீடமைப்புத் திட்டத்தின் மிகுதியுள்ள வேலைகள் அடுத்த வாரத்த்ற்குள்
முடிவடைந்து மக்களின் பாவனைக்காக விரைவில் கையளிக்கப்படும் என்று வீடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.


அரச ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்திற்கு ஏற்ப மாதாந்தம் செலுத்தக் கூடிய வகையில் இவ்வீட்டுத் திட்டங்களை வழங்க முடியும் என்றும் அத்துடன் எதிர்காலத்தில் நாட்டில் வீடில்லாப் பிரச்சினையைத் தீர்க்க நாடு முழுவதும் இது போன்ற வீட்டுத் திட்டங்கள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


2015 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த இத் தொடர்மாடி வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த ஆட்சியின் அரசாங்கத்தினால் மந்தமாகி விட்டது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


மொரட்டுவை, லுணாவ நகர தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தின் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட நேற்று (18) சென்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்


மிகுதியாக உள்ள நிர்மாணப் பணிகளை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இத்தொடர் மாடி வீட்டுத் திட்டத்தில் மொத்தம் 11 மாடிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் 356 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீடும் 456 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இதற்கான மொத்தச் செலவு 1.393 மில்லியன் ரூபா ஆகும்.


வீடுகள் தேவைப்படும் நடுத்தர வர்க்க மக்களை தொடர்மாடி வீட்டுத் திட்டத்தில் ஒரு வீடு வாங்குவதற்கான ஏற்பாடுகளை நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை செய்துள்ளன.

இந்த நகர குடியிருப்பு தொடர்மாடி வீட்டுத் திட்டத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபை நிர்மாணிக்கின்றது. இதில் சமூக மண்டபம், பேரங்காடி (ஷொப்பிங் மோல்), பாலர் பள்ளி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஆகியவை உள்ளடங்குகின்றன.


இந்த தொடர்மாடி வீட்டுத் திட்டம் பல தொடர்மாடிகளைக் கொண்டுள்ளது. இது லுணாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மற்றும் காலி வீதியில் இருந்து இந்த தொடர்மாடி வரை உள்ள இடைப்பட்ட தூரம் 1 கிலோ மீற்றர் ஆகும்.


நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அறிவுறுத்தலுக்கமைய இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் இந்த Nவைலைத் திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது. இந்த வீட்டுத் திட்டத்தினை நிர்மாணிக்கத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம்   வழங்குகிறது.

இந்நிகழ்வில் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும்  அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

2020.02.19

ஊடகப் பிரிவு

அரச ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்திற்கு ஏற்ப மாதாந்தம் செலுத்தக் கூடிய வகையில் வீடுகள்... அரச ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்திற்கு ஏற்ப மாதாந்தம் செலுத்தக் கூடிய வகையில் வீடுகள்... Reviewed by Madawala News on February 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.