தற்கொலையில் இருந்து மாணவியை காப்பாற்றிய போலீசாரின் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகள்..


தாய் வௌிநாடு ஒன்றில் கடந்த இரண்டு வருடங்களாக பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றார்.

தந்தை கடந்த 4 வருடங்களுக்கு முன்னரே தனது மகளையும் மனைவியையும் விட்டு பிரிந்து சென்று பிரிதொரு வாழ்க்கை துணையை தேடிக்கொண்டுள்ளார்.

தாய் வௌிநாடொன்றிற்கு சென்றதும் மகள் தனது தாயின் அம்மாவிடம்   வளர்ந்து வந்துள்ளார்.

 தற்பொழுது 9 ஆம் தரத்தில்  பிரபல பாடசாலை ஒன்றில் அம்மாணவி  கல்வி கற்று வருகின்றார்.

இந்நிலையில் அம்மாணவி  தனக்கு 13 வயது இருக்கும் போது   7  ஆம் தரம் கற்றுக்கொண்டிருக்கையிலேயே காதல் வசப்பட்டு காதலன் ஒருவரையும் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளார்.

காதலனுக்கும்  தற்போது 17 தான்  வயதாகின்றது.

 தன்னுடைய அம்மம்மா இல்லாத சந்தர்ப்பத்தில் தனது காதலனை வீட்டிற்கு அழைத்து அம்மாணவி  இரகசியமான முறையில் பழகியுயும்  வந்துள்ளார்.

இந்நிலையில்  காதலனின் தந்தைக்கு விடயம் தெரியவந்ததை தொடர்ந்து மாணவியை  கொலை செய்வதாக அச்சுறுத்தியுள்ளதோடு, தனது மகனிடம் பழகுவதையும் நிறுத்திக்கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த மாணவி  அருகில் உள்ள கங்கை ஒன்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

கங்கைக்கு அருகில் நீண்ட நேரம் காத்திருந்த சிறுமி  மீது சந்தேகம் கொண்ட அயலவர்கள் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறையிட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரிடம்  விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவளின் காதலன் தொடர்பிலும் தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் அவரை  வைத்தியசாலைக்கு அழைத்து சென்று வைத்திய சிகிச்சைக்குட்படுத்திய காவல் துறையினர் அவள் கர்ப்பிணியாக இருப்பதையும் அறிந்துக்கொண்டுள்ளனர்.

உடனடியாக சிறுவர் துஷ்பிரயோக குற்றத்தின் கீழ்  காதலனை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்த குறித்த இளைஞரை நேற்றைய தினம் தம்புள்ளை நீதிமன்றில் முன்னிலை படுத்தியதை தொடர்ந்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாணவி  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலையில் இருந்து மாணவியை காப்பாற்றிய போலீசாரின் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகள்.. தற்கொலையில் இருந்து மாணவியை காப்பாற்றிய போலீசாரின் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகள்.. Reviewed by Madawala News on February 12, 2020 Rating: 5