பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை பாக்கு விற்பனை . ஒருவர் கைது. (ஆயுர்வேத அனுமதி பெற்றது என்ற லேபல் ஓட்டப்பட்டது) - Madawala News Number 1 Tamil website from Srilanka

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை பாக்கு விற்பனை . ஒருவர் கைது. (ஆயுர்வேத அனுமதி பெற்றது என்ற லேபல் ஓட்டப்பட்டது)


பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஆயுர்வேத அனுமதி பெற்றது என்ற லேபல் ஓட்டப்பட்ட
போதை தரக்கூடிய பாக்கு பக்கெட்டுகளை விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் புஸல்லாவ பொலிஸாரினால் நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட டுள்ளார்.

புஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் பலிபான பண்டாரவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று கம்பளை நீதிமன்றில் ஆஜர்ப டுத்த நடவடிக்கை மேற்கொண்டு வரு வதாக பொலிஸார் மேலும் குறிப்பிட் டனர். பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளிலிருந்து மேற்படி பாக்கு பக்கெட் டுகள் நாடளாவிய ரீதியில் பாடசாலை களுக்கு அருகில் அமைந்திருக்கும் பெட்டிக்கடை களில் விற்பனை செய்யப்பட்டு வரு கின்றமை தெரிய வந்துள்ளது.

மேற்படி பாக்கு, வாய் நோய்க்கான மருந்தென்ற போர்வையில் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை பாக்கு விற்பனை . ஒருவர் கைது. (ஆயுர்வேத அனுமதி பெற்றது என்ற லேபல் ஓட்டப்பட்டது) பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை பாக்கு விற்பனை . ஒருவர் கைது. (ஆயுர்வேத அனுமதி பெற்றது என்ற லேபல் ஓட்டப்பட்டது) Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5